சீனாவில் புதிதாக 1,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,695 பேருக்கு … Read more

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: ஐகோர்ட்டு தீர்ப்ைப தொடர்ந்து ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு படை ரத்து கர்நாடகத்தில் லோக்அயுக்தா அமைப்பு கடந்த 1985-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த அமைப்பு சிம்மசொப்பனாக திகழ்ந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த தோனி- வைரல் வீடியோ

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த … Read more

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- அன்டோனியோ குட்டரெஸ்

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள … Read more

வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தை; வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

மங்களூரு: மணிப்பால் அருகே வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிறுத்தை அட்டகாசம் உடுப்பி மாவட்டம் மணிப்பால் தாலுகா இரியடுக்கா அருகே தர்காசு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக … Read more

2-ம் எலிசபெத் மரணம்: இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

லண்டன், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக … Read more

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் ராணி எலிசபெத் – முதல் இடத்தில் யார்…?

இங்கிலாந்து, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் நேற்று மரணமடைந்தார். தனது 96-வது வயதில் அவர் மரணமடைந்தார். ராணி 2-ம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி. 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த எலிசபெத் 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக 2-ம் எலிசபெத் செயல்பட்டு வந்தார். இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் … Read more

பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைதான விவகாரம்: தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்

பெங்களூரு: பெங்களூரு திலக்நகர் பி.டி.பி. லே-அவுட் 3-வது கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த மாதம் (ஆகஸ்டு) மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், அந்த அமைப்புடன் சேருவதற்காக காஷ்மீரில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அக்தா் கொடுத்த தகவலின்பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான … Read more

டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை

பெர்ன், சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் … Read more

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் வரும் 23 ஆம் தேதி ஏவப்படும் என தகவல்

வாஷிங்டன், சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 2025- ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்குவதாக திட்டமிடப்பட்டது. பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் விணகலம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து … Read more