'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை தகவல்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தங்களிடம் … Read more

20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை – ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் 2-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 17-வது இடத்திலும், விராட் கோலி 34-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (792 புள்ளி), 2-வது இடத்தில் … Read more

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மரணம்

கராக்கஸ், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3-வது மகன் கமிலோ சேகுவேரா. 60 வயதான கமிலோ சேகுவேரா கியூயாவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக இவர் இருந்து வந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு

புதுடெல்லி, டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை சக்சேனா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். … Read more

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் ஓய்வு

கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அடிக்கடி காயத்தில் சிக்குவதால் முன்பு போல் என்னால் கடினமாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அணியிலும் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேலும் எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு பிறகு எனது எதிர்காலம் என்ன என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இது குறித்து சில வாரங்களாக தீவிரமாக … Read more

இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

கொழும்பு, வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,733 கோடி) கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை மேலும் … Read more

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,380 கோடி மானியம் – மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் முதல் தவணையாக கர்நாடகம், உத்தரபிரதேசம், திரிபுரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.4189.58 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு ரூ.1,380.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்தம் ரூ.15 ஆயிரத்து 705.65 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, லக்‌ஷயா தோல்வி

ஒசாகா, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அண்மையில் உலக போட்டியில் மகுடம் சூடிய அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமாகுச்சி 21-9, 21-17 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் சாய்னாவை பந்தாடினார். யமாகுச்சிக்கு எதிராக 13-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் … Read more

சீனாவில் புதிதாக 1,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,829 பேருக்கு … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது – கட்சி மேலிடம் அறிவிப்பு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வாக்களிப்பவர் பட்டியலை வெளியிடும் நடைமுறை காங்கிரசில் இல்லை. பழைய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். இது ஒரு உள் … Read more