முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்; மோடி மனிதாபிமானம் மிக்கவர் – குலாம்நபி ஆசாத்

புதுடெல்லி, காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் தனது பேட்டியில் பிரதமர் மோடி பற்றி கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி குழந்தைகளோ, சொந்த குடும்பமோ இல்லாதவர். அதனால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். கடந்த 2007-ம் ஆண்டு நான் காஷ்மீர் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காஷ்மீருக்கு சுற்றுலா வந்த குஜராத் பயணிகளின் பஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதில் சிலர் பலியானார்கள். அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த … Read more

ஆசிய கோப்பையில் 7-வது முறையாக பங்கேற்று ரோகித் சர்மா புதிய சாதனை

புதுடெல்லி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அது முதல் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்று வரும் அவருக்கு இது 7-வது ஆசிய கோப்பை போட்டியாகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடியதன் மூலம் 7 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். டோனி, தெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடி … Read more

அமெரிக்க 'டிரோன்'களுக்கு அனுமதி: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஜூலை மாதம்31-ந்தேதி அமெரிக்கா நடத்திய ‘டிரோன்’ தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இந்த சூழலில் இப்போதும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் அடிக்கடி டிரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலீபான் அரசின் ராணுவ … Read more

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் டெல்லி..!! 2-வது இடத்தில் மும்பை

புதுடெல்லி, நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும். இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி

நியூயார்க், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்து விட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முர்ரே … Read more

உலகின் மருந்தாளுனராக இந்தியா திகழ்கிறது! – ஐ.நா பொது சபை தலைவர் அப்துல்லா ஷாஹித் புகழாரம்

புதுடெல்லி, மாலத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இன்று புதுடெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் நிதி நெருக்கடி மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக உள்ள மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இந்தியா குறித்து அளித்த பேட்டியில் பேசியதாவது:- இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை சிலர் மாலத்தீவு மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இது ஒன்றும் இல்லாத ஒரு குழுவினரால் … Read more

'காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம்' – நிதின் கட்காரி

நாக்பூர், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், சிறந்த அரசியல் எதிர்காலம் கொண்ட நல்ல மனிதராக இருப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஜிச்கார் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அவரிடம், காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிப்பேன் என்று … Read more

உலக மல்யுத்த போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி

லக்னோ, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி லக்னோவில் உள்ள சாய் மையத்தில் நேற்று நடந்தது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 7-0 என்ற புள்ளி கணக்கில் சமீபத்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக … Read more

இம்ரான் கானின் உரையை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப தடை இல்லை- கோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு கடந்த வாரம் தடை விதித்து இருந்தது. இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் இம்ரான் கானின் உரைகளை நேரலையாக ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது. இந்த நிலையில் இம்ரான் கானின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு … Read more

பீகார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி – சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் அனில்குமார் சகானி. தற்போது இவர் அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அனில்குமார் சகானி, எம்.பி.யாக இருந்தபோது பயணப்படி, அகவிலைப்படி போன்ற சலுகைகளை மோசடியாக பெற்றுள்ளார். அதாவது எந்தவித பயணத்தையும் மேற்கொள்ளாமலே பயணப்படியை பெற்றுள்ளார். இதற்காக போலி டிக்கெட்டுகளை வழங்கி இருக்கிறார். அந்த வகையில் ரூ.23.71 லட்சம் மோசடியாக பெற்று உள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். … Read more