இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் 20 பேர் போட்டி

புதுடெல்லி, இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும். தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தலா 2 பேர், செயற்குழு கமிட்டி உறுப்பினர் பதவிக்கு 14 பேர் என மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றை பரிசீலித்த தேர்தலை நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா அனைத்து வேட்பு மனுக்களும் சரியான முறையில் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்தது

நியூயார்க், சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்து விட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் … Read more

மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலை அடுத்த மாதம் 10-ந் தேதி திறப்பு-மந்திரி சங்கர் பி.பட்டீல் தகவல்

மண்டியா: மந்திரி ஆய்வு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மந்திரி சங்கர் பி.பட்டீல், மண்டியாவில் மைசுகர் சர்க்கரை ஆலையை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலை மீண்டும் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் முடிவடைந்துவிடும். இதையடுத்து அன்றைய தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சர்க்கரை ஆலையை திறந்து வைக்கிறார். இந்த சர்க்கரை ஆலை கர்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் … Read more

ஹர்திக் பாண்டியா அதிரடி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அட்டகாசமான வெற்றி

துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் … Read more

ஆப்கானிஸ்தானில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கல்; வீடுவீடாக சென்று சோதனையிடும் தலிபான்கள்!

காபுல், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விலக்கிக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் அகுந்த் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று தலிபான்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் … Read more

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மைசூரு: நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து ஓய்ந்தது. தொடர்மழையால் அணைகள், ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – பிரதமர் மோடி வாழ்த்து

துபாய், ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 … Read more

சீனாவில் புதிதாக 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் 1,494 பேருக்கு … Read more

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் இறுதி சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய எம்.எல்.ஏ.

மைசூரு: மைசூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). இவர் கடந்த 26-ந்தேதி வெளியே சென்று இருந்தார். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து உள்ளது. கெக்கெரேகுந்தி கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சமயத்தில் மகேஷ் அந்த சாலையை கடக்க முயன்றபோது திடீரென தரைப்பாலம் உடைந்ததில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். போலீசார், தீயணைப்பு படையினர் சேர்ந்து அவரை நேற்றுமுன்தினம் பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஜெயப்புரா … Read more

ஆசிய கோப்பை : பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா…! 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன . ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் … Read more