மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 650 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் தூத்துக்குடி வீரத்தமிழன் போர்க்கலை சிலம்பக்கூடம் சார்பில் 96 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு தனித்திறமை, இரட்டை கம்பு தனித்திறமை மற்றும் தொடுதிறமை ஆகிய மூன்று போட்டி பிரிவிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். வெற்றி பெற்ற மாணவ, … Read more

மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் – வங்காளதேச அரசு

டாக்கா, உலகின் பல நாடுகளை போல நம் அண்டை நாடான வங்காளதேசமும் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது.இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் … Read more

மலையாளத்துறை அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு தடை கேரள ஐகோர்ட்டு உத்தரவு

பெரும்பாவூர், கண்ணூர் சர்வகலாசாலையில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. கண்ணூர் சர்வகலாசாலையில் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக கண்ணூரை சேர்ந்த பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார். இவர் கண்ணுரைச் சேர்ந்தவர். பிரியா வர்கீஸ் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த தேர்வில் 2-ம் இடம் பிடித்த … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – ஸ்ரீகாந்த், பிரனோய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ, 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதினார். இதில் கிதாம்பி … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் திரும்ப முடியாமல் தவித்த இந்திய மாணவர்களுக்கு விசா – சீன அரசு

பீஜிங், சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் பயிலும் சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா முதல் அலை காலத்தில் தாய்நாடு திரும்பினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்க சீனா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டிருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, இந்திய … Read more

பஞ்சாப் முன்னாள் மந்திரி கைது

சண்டிகர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உணவு மற்றும் விநியோகத் துறை மந்திரியாக இருந்தவர் பரத் பூஷன் அஷு. இவரது பதவிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், இவரை இன்று மொஹாலியில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஜூன் மாதம், முன்னாள் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பஞ்சாபில் பகவந்த் மன் தலைமையிலான ஆட்சி … Read more

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி – தொடரை முழுமையாக கைப்பற்றியது

ஹராரே, இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு … Read more

அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் கவர்னர் திடீர் தைவான் பயணம்

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியும், அவரை தொடர்ந்து 5 அமெரிக்க எம்.பி.க்களும் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டதால் சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் நேற்று திடீர் பயணமாக தைவான் சென்றார். அவர் அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தினத்தந்தி Related Tags : இண்டியானா தைவான் அமெரிக்க

பத்ரா சால் முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 5-ந் தேதி வரை நீட்டிப்பு

மும்பை, மும்பையில் ‘பத்ரா சால்’ என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். முதலில் அமலாக்கத்துறை … Read more

ஆசிய கோப்பை : காயம் காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விலகல்

துபாய், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் வரும் 27-ந் தேதி ஆப்கானிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் பயிற்சியின் போது அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. … Read more