தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல கிரிக்கெட் நடுவர் சாலை விபத்தில் மரணம்

கேப் டவுன், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடி கோர்ட்சன் சாலை விபத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கோர்ட்ஸனுடன் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தன் நண்பர்களுடன் கோர்ட்சன் கோல்ப் விளையாடிவிட்டு கேப் டவுனில் இருந்து நெல்சன் மண்டேலா விரிகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 1992 … Read more

காலநிலை மாற்றத்தால் மோசமடையும் தொற்று நோய்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது. கொரோனா, குரங்கு அம்மை தொற்று உடனான போராட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல உலக நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தொற்று நோய் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் … Read more

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்! – மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருப்பதி, திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், … Read more

சிலம்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி நாசரேத்: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய. மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி தாளாளர் செல்வின், பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். … Read more

சீனாவில் புதிதாக 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 868 பேருக்கு … Read more

முதல் கட்டமாக சென்னை, பெங்களூரு உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம்

புதுடெல்லி, இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் முடிவடைந்தது. ஏழு நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் 40 சுற்றுகளுக்குப் பிறகு ஏல தொகை ரூ. 1.5 லட்சம் கோடியை எட்டியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்று இருந்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கியது. மொத்த அலைக்கற்றை ஏலத்தில் … Read more

செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் – பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல … Read more

இலங்கையில் மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி!!

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் … Read more

கேரள ஆளுங்கட்சி தலைவரின் மனைவிக்கு பேராசிரியை பணி – பல்கலைகழக துணைவேந்தர் பதிலளிக்க கவர்னர் உத்தரவு!

திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சட்ட விதிகளை பின்பற்றாமல் கேரளாவில் ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் ராகேஷின் மனைவிக்கு பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளராக ராகேஷ் உள்ளார். மேலும் அவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இந்நிலையில் அவருடைய மனைவியின் நியமனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான நேர்காணலில், அவருக்கு … Read more

துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளின்றி பதக்க எண்ணிக்கையில் அசத்திய இந்தியா – காமன்வெல்த் பயணம் ஒரு பார்வை

பர்மிங்காம், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான நேற்று, இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்றது. இறுதியாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது. … Read more