இலங்கை காலிமுகத்திடலில் அதிபருக்கு எதிரான போராட்டம் – தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அன்றாட தேவைகளை பெற முடியாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளான நிலையில், அங்கு போராட்டம் வெடித்தது. இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். அதனை தொடர்ந்து இலங்கையின் … Read more

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 26 லட்சம் உயர்வு- சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை

புதுடெல்லி, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை, அசையும் சொத்துக்கள் மட்டுமே அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனக்கு உள்ள சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளார். … Read more

நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு பதக்கம்

கோயம்புத்தூர் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் கோவை நேரு ரைபிள் கிளப் மாணவி டுவிங்கிள் யாதவ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மாஸ்டர் உமன் பிரிவில் பிரீத்தி தங்கபதக்கம், 50 மீட்டர் ஓப்பன் செட் ரைபிள் பிரிவில் மாணவன் ஜெய்கிஷோர் தங்க பதக்கம், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கம் பெற்றனர். 10 மீட்டர் ஓப்பன் செட் ஏர் ரைபிள் … Read more

கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு- வெளியேற முடியாமல் சிக்கிய 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

பெய்ஜிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு தொற்று பரவல் வேகம் குறைந்தாலும் தற்போது சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இதனால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ‘சீனாவின் ஹவாய்’ என்று அழைக்கப்படும் சன்யா என்ற பிரபல சுற்றுலத் தளம் உள்ளது. சீனாவின் தெற்கு … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து தலா ஒருவர் மட்டுமே நியமனம் – மத்திய அரசு

புதுடெல்லி, மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணை வேந்தர் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களில், தலா ஒருவர் மட்டுமே துணை வேந்தர் பதவி வகித்து வருகின்றனர். மத்தியக் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான, இடஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மந்திரி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கல்வி … Read more

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல கிரிக்கெட் நடுவர் சாலை விபத்தில் மரணம்

கேப் டவுன், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடி கோர்ட்சன் சாலை விபத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கோர்ட்ஸனுடன் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தன் நண்பர்களுடன் கோர்ட்சன் கோல்ப் விளையாடிவிட்டு கேப் டவுனில் இருந்து நெல்சன் மண்டேலா விரிகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 1992 … Read more

காலநிலை மாற்றத்தால் மோசமடையும் தொற்று நோய்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது. கொரோனா, குரங்கு அம்மை தொற்று உடனான போராட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல உலக நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தொற்று நோய் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் … Read more

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்! – மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருப்பதி, திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், … Read more

சிலம்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி நாசரேத்: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய. மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி தாளாளர் செல்வின், பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். … Read more

சீனாவில் புதிதாக 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 868 பேருக்கு … Read more