டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை !

லண்டன், லண்டனில் 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான பிராவோ டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் 600 விக்கெட்டுகளை … Read more

நாட்டு எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் – தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

பீஜிங், தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா … Read more

நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டம்: உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதி கைது

லக்னோ, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் இருந்த பயங்கரவாதி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாதியான முகம்மது நதீமை, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது. கைது செய்யபட்ட முகம்மது நதீம், நுபுர் சர்மாவை கொலை செய்ய பணிக்கப்பட்டு இருந்ததாகவும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஜெய்ஷ் … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: நிக் கிர்கியோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணியின் நிக் கிர்கியோஸ் 6-7(2), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான டேனில் மெத்வதேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் … Read more

"ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது" – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் தெற்கு பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ‘சாப்போரிஷியா’ அமைந்துள்ளது. இந்த பகுதியை உக்ரைன் மீது … Read more

சமூக விரோத சக்திகளை அழிக்க அரசு உறுதி; நளின்குமார் கட்டீல் பேட்டி

மங்களூரு; தட்சிண கன்னடாவில் கடந்த மாதத்தில் (ஜூலை) அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் கடலோர மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரவீன் நெட்டார் படுகொலையில் தொடர்புடையவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். 2 தினங்களுக்கு முன்பு இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டி … Read more

மீண்டும் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்- இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமனம்

கொல்கத்தா, லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட … Read more

சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம்! சீனாவுக்கு வட்டி கட்டி வரும் நிலை

காத்மாண்டு, நேபாள அரசு வாங்கிய சீன விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அந்நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2012இல், நேபாள விமான கழகம் (என்ஏசி) சீனாவின் விமான நிறுவன கழகத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.அதன்படி, 2014ஆம் வருடம் 2 MA60 ரக விமானங்கள் மற்றும் 4 Y12 இ ரக விமானங்கள் நேபாளம் வந்தன, பின்னர் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் இந்த விமானங்களை திறம்பட கையாள விமானிகள் இல்லாமலும், லாபம் வராத நிலையிலும் இந்த … Read more

சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாப சாவு

மங்களூரு; உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதி இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்ற மாடு அவர்கள் மோட்டார் சைக்கிள் முன்பு பாய்ந்தது. மாடு … Read more

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி – கால் இறுதி சுற்றுக்கு போலந்து வீரர் முன்னேற்றம்

ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ரமோஸ் உடன், போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸ் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்காஸ் வெற்றி பெற்று காலிறுதி … Read more