இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்தது இலங்கை

கொழும்பு, சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17-ந் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது. இருப்பினும், அது உளவு பார்க்க வாய்ப்புள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது. ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல், இந்திய பெருங்கடலில் நுழைந்து … Read more

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி! சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேஜஸ்வி யாதவ் பேச்சு

புதுடெல்லி, நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அம்மாநில துணை முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, “நான் சந்தித்த தலைவர்கள் … Read more

"நாட்டுக்காக விளையாடுங்கள் என வீரர்களிடம் பிச்சையா எடுக்க முடியும்"- வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் வேதனை

போர்ட் ஆப் ஸ்பெயின், உலகம் முழுவதும் 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புக்கு பிறகு பல நாடுகள் இது போன்ற லீக் தொடரை நடத்தி வருகின்றனர். இது போன்ற கிரிக்கெட்டுகளை நடத்துவதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகளுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக … Read more

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வறட்சி- அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசாங்கம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் தெற்கு, … Read more

பள்ளி பாடத் திட்டத்தில் ராணுவ வீரர்களின் வீர தீர செயல்கள்: மாணவர்களுக்கான "வீர கதை" போட்டியில் கல்வித்துறை மந்திரி பேச்சு!

புதுடெல்லி, ராணுவ வீரர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் மற்றும் செய்த தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில், “வீர கதை” போட்டி நடைபெற்றது. அக்டோபர் 21 முதல் நவம்பர் 20, 2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 4,788 பள்ளிகளைச் சேர்ந்த 8.04 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கட்டுரைகள், கவிதைகள், வரைபடங்கள் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் மூலம் உத்வேகம் தரும் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர். பல சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, 25 மாணவர்கள் … Read more

டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை !

லண்டன், லண்டனில் 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான பிராவோ டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் 600 விக்கெட்டுகளை … Read more

நாட்டு எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் – தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

பீஜிங், தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா … Read more

நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டம்: உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதி கைது

லக்னோ, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் இருந்த பயங்கரவாதி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாதியான முகம்மது நதீமை, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது. கைது செய்யபட்ட முகம்மது நதீம், நுபுர் சர்மாவை கொலை செய்ய பணிக்கப்பட்டு இருந்ததாகவும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஜெய்ஷ் … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: நிக் கிர்கியோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணியின் நிக் கிர்கியோஸ் 6-7(2), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான டேனில் மெத்வதேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் … Read more

"ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது" – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் தெற்கு பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ‘சாப்போரிஷியா’ அமைந்துள்ளது. இந்த பகுதியை உக்ரைன் மீது … Read more