எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் தீ விபத்து; 41 பேர் உயிரிழப்பு

கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இதனை தொடர்ந்து, அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் … Read more

முன்னாள் பிரதமர் நேருவின் கைப்பட எழுதப்பட்ட 'முதல் சுதந்திர தின உரையை' சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ்!

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற ‘முதல் சுதந்திர தின உரையின்’ வரைவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. அதில் அவர் நாட்டின் “விதியுடன் கூடிய தேதி” பற்றி எழுதியிருந்தார் என தெரிவித்துள்ளது.1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு, அரசியல் நிர்ணய சபையின் நள்ளிரவு அமர்வில் நேரு ஆற்றிய உரையின் வீடியோவையும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். “75 ஆண்டுகளுக்கு முன்பு, நள்ளிரவுக்குப் பிறகு, நேரு தனது அழியாத ‘டிரிஸ்ட் வித் … Read more

செஸ் ஒலிம்பியாட் தாக்கம்- தாயகம் திரும்பியதும் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்ட செஸ்சபிள் சிஇஓ

ஆம்ஸ்டர்டம், 185 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44 வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்கள் பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு, பரிசு பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டே வந்து இருந்தார். இவர் இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி.இ.ஓ. வாகவும் உள்ளார். சென்னைக்கு வந்த … Read more

சீன உளவு கப்பல் வருகை… இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! இலங்கை அதிரடி அறிவிப்பு

கொழும்பு, சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு … Read more

தலைநகர் டெல்லியில் இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 31-ஐ விட அதிகமாகும். இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது … Read more

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இஸ்லாமாபாத், இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காண்பித்து பேசியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக லாகூரில் நடைபெற்ற … Read more

பெங்களூருவின் வளர்ச்சிக்கு விரைவில் புதிய திட்டம் அமல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: போக்குவரத்து வசதிகள் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் 75 மின்சார பஸ்கள் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பஸ்களின் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:- பெங்களூரு வளர்ச்சி பெற அனைத்து துறைகளிலும் சரியாக வேண்டும். போக்குவரத்து வசதிகள் மட்டும் அதிகமாக இருந்தால் போதாது. பி.எம்.டி.சி.க்கு தற்போது மாநில அரசு ரூ.270 கோடி மானியம் வழங்குகிறது. அந்த கழகத்திற்கு அரசு … Read more

ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு

சென்னை: ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நாளை முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:- கார்த்திக் ஷர்மா (கேப்டன்), குஷ் சிங், ஷேகர் துரான், ஆதித்ய ராணா, ஆஷிஷ் ஸ்வைன், நயன்பாய் பட்டேல் துருவில், லவிகுமார், யமன் கட்டிக், அதுல் சிங், அபிஷேக், கபிலன் மகேந்திரன், ஆர்யன். அணியின் மேலாளர்: ஜெ.நடராஜன், தலைமை பயிற்சியாளர்: பிர் … Read more

ரஷியாவுடனான உறவில் விரிசல் – இஸ்ரோவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

லண்டன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இஎஸ்ஏ) தனது விண்வெளி பணிகளைத் தொடங்க புதிய கூட்டணிகளை தேட ஆரம்பித்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பான உறவுகளில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதன் ஐரோப்பிய விண்வெளி உறவுகளை முடித்துக்கொண்டது. மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால் ரஷியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்காரணமாக, ரஷியாவுடனான செவ்வாய் கிரக கூட்டுத் திட்டம் உட்பட பல பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷியாவின் விண்கலமான சோயுஸ் … Read more