சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா வழங்கிய இலவச சைக்கிளில் சவாரி செய்த மடகாஸ்கர் பிரதமர்! வைரல் வீடியோ

அண்டனானரிவோ [மடகாஸ்கர்], இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிள் ஓட்டினர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் நாட்டுக்கான … Read more

சிக்கமகளூருவில் சுதந்திர தின விழா கோலாகலம்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதையடுத்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். விழாவில் கலெக்டர் ரமேஷ் பேசுகையில், … Read more

இறால் உணவுடன் ஒப்பிட்டு ராஸ் டெய்லருக்கு ஷேவாக் கூறிய பேட்டிங் அறிவுரை – சுயசரிதை புத்தகத்தில் ருசிகர தகவல்

புதுடெல்லி, இறால் உணவை ருசித்து சாப்பிடுவதுடன் ஒப்பிட்டு ஷேவாக் கூறிய வித்தியாசமான பேட்டிங் அறிவுரையை நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தான் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை ‘பிளாக் அண்ட் ஒயிட்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய போது சந்தித்த சில அனுபவங்களை சுவைப்பட எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 2012-ம் ஆண்டு … Read more

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருக்கும் ஈரானுக்கும் தொடர்பா.. திட்டவட்டமாக மறுத்த ஈரான்!

டெஹ்ரான், பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. … Read more

செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது "ஹலோவுக்கு" பதிலாக வந்தே மாதரம்- மராட்டிய மந்திரி உத்தரவு

மும்பை, மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று 7 வார காலமாகிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டிய மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், எந்தெந்த துறை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை இன்று மராட்டிய முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டது. இதில் வனத்துறை மற்றும் கலாச்சார துறை மந்திரியாக பாஜகவின் சுதிர் முங்கந்திவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி..?

சென்னை, இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிதாக 2,604 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமை: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: சுதந்திர போராட்டம் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஆங்கிலேயர் காலத்துடன் அடிமைத்தனம் முடிவடைந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தான் இன்னும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமை என்று நிரூபித்துள்ளார். இந்த பா.ஜனதா அரசு சுதந்திர போராட்டம் குறித்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் நேருைவ அரசு கைவிட்டுள்ளது. பசவராஜ் பொம்மை தனது பதவியை காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்வார் என்பது இதன் மூலம் தெரிகிறது. நேரு … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பீட்ரிஸ் ஹடாத் மியா

டொரண்டோ, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பிரேசில் நாட்டை சேர்ந்த பீட்ரிஸ் … Read more

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் தீ விபத்து; 41 பேர் உயிரிழப்பு

கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இதனை தொடர்ந்து, அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் … Read more