பிள்ளாரிப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் ரூ.65 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை மந்திரி ஆர்.கே.ரோஜா பங்கேற்பு

திருப்பதி, திருப்பதி மாவட்டம் புத்தூரில் உள்ள காமாட்சிதேவி சமேத சதாசிவேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக கொடகண்டி ரமேஷ்பாபு பதவியேற்றார். நிகழ்ச்சியில் மந்திரி ஆர்.கே.ரோஜா ேபசுகையில், புத்தூர் சதாசிவேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை மேற்கொள்வேன், என்றார். நிகழ்ச்சியில் புத்தூர் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், புத்தூர் கிராமிய மண்டல பரிஷத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். … Read more

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து கர்ப்பம் காரணமாக கெர்பர் விலகல்

I really wanted to play the @usopen but eventually I decided that two against one just isn’t a fair competition ❤️ pic.twitter.com/Y6rRYOIUDR — Angelique Kerber (@AngeliqueKerber) August 24, 2022 முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனியை சேர்ந்த 34 வயது ஏஞ்சலிக் கெர்பர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். … Read more

17 வயதில் உலகை தனியாக வலம் வந்து சாதனை படைத்த இளம் விமானி

மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான ‘ஷார்க்’ என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட … Read more

காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கம் நாசவேலை காரணமா?

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் யூ டியூப் சேனல் நேற்று திடீரென நீக்கப்பட்டது. இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இதற்கு நாசவேலை காரணமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் ஒரு பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, “இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் எங்களது யூ டியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை மீண்டும் கொண்டு வருவோம். இது தொடர்பாக கூகுள் மற்றும் யூ டியூப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது. மேலும், “இதற்கு காரணம் தொழில் … Read more

தென்ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 149 ரன்னிலும் சுருண்டு சொந்த மண்ணில் 3-வது நாளுக்குள் தோல்வியை தழுவியது. அந்த அணி மொத்தம் 82.4 … Read more

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட நிலையில், … Read more

வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது – மத்திய மந்திரி உறுதி

சிம்லா, ஆக.25- மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாட்டில் எந்த பொதுத்துறை வங்கியும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதுபோன்ற செயல்திட்டம் எதுவும் இல்லை” என்று கூறினார். தினத்தந்தி Related Tags : வங்கிகள் தனியார்மயம்

குன்னம் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் கைப்பந்து-கால்பந்து பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினையொட்டி குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து, ஹேண்ட் பால், கூடைப்பந்து, கால்பந்து, பூப்பந்தாட்டம் ஆகியவை பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் தலைவர் பரமேஷ்குமார், நகர்மன்ற … Read more

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல் ஈராக் மற்றும் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்ளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் சிரியாவின் தெற்கு பகுதியில் ரிப் டிமாஷ்க் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவதளத்தின் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ‘டிரோன்’ மூலம் தாக்குதல் … Read more

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியையொட்டி கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- மின் இணைப்பு கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது இயல்பு. சிலைகளை வைக்க அரசு அனுமதி வழங்குவது முக்கியமானது. இதனால் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இந்த அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அதனால் மாநகராட்சிகள் மற்றும் இதர நகர உள்ளாட்சி அமைப்புகளில் கீழ்கண்ட … Read more