அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சானியா மிர்சா விலகல்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இரட்டையர் பிரிவில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான இந்திய வீராங்கனை சானியா மிர்சா திடீரென விலகி இருக்கிறார். 35 வயது சானியா மிர்சா இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெற இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் தனது ஓய்வு முடிவையும் மாற்றி … Read more

தவறான வானிலை முன்னறிவிப்பு; ஹங்கேரியில் வானிலை ஆய்வாளர்கள் பணி நீக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20-ந் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டும். குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதாபெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாகும் இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி புனித ஸ்டீபன் தினம் … Read more

மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ சேவை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே பயணிகள் மெட்ரோ நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் மெட்ரோ ரெயில்களுக்கு டிக்கெட் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே செல்போன் செயலியை பயன்படுத்தி கட்டணத்தை கொடுத்து டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. … Read more

ஜிம்பாப்வே தொடர்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன்கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முதல் போட்டியில் 82 ரன்களும், 2-வது போட்டியில் 33 … Read more

புதின் உதவியாளர் மகளின் கொலையில் தொடர்பா? உக்ரைன் விளக்கம்

ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர் அலெக்சாண்டர் டுகின். இவரது 30 வயது மகள் டார்யா டுகினா. பத்திரிகையாளரான டார்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மாஸ்கோ அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் குண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உக்ரைன் மீதான ரஷிய போரை தீவிரமாக ஆதரித்து வரும் அலெக்சாண்டர் டுகினை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் அவரது மகள் டார்யா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கார் குண்டு வெடிப்பு குறித்து … Read more

இளநிலை உதவியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 7 பேர் கைது

பெலகாவி: 21 மையங்களில்… கர்நாடக மின் பரிமாற்று நிறுவனத்தில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு கடந்த 7-ந் தேதி நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 21 மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக கதக், உத்தர கன்னடா மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கதக் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி துணை முதல்வர் … Read more

மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர் பெரம்பலூரில் மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அஸ்வின் கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சவுகத்அலி தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன், பெரம்பலூர், அரியலூர் சரக மருந்துகள் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நார்கோடிக் மருந்துகளை விற்பனை செய்யும் முறைகள் பற்றி … Read more

அமெரிக்க நீதித்துறை மீது டிரம்ப் வழக்கு

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றாதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுப்பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 8-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் … Read more

கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 24,564 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 987 பேர், மைசூரூவில் 99 பேர், ஹாசனின் 73 பேர் உட்பட புதிதாக 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பல்லாரி, தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். இதுவரை 40 லட்சத்து 43 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 40 ஆயிரத்து ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். 1,295 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 92 … Read more

'அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன்' என கூறிய தனஸ்ரீ வர்மா; உற்சாகத்தில் ஆட்டம்போட்ட சாஹல் – வீடியோ

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ‘ஆக்ட்டிவாக’ இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் … Read more