பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

இஸ்லாமாபாத், 3.30 கோடி மக்கள் பாதிப்பு பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 … Read more

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை – அமித்ஷா

சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். நக்சலைட்டு பிரச்சினை அப்போது பேசிய அவர், ‘நாட்டில் நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. நக்சலைட்டு பிரச்சினையும், பயங்கரவாத பிரச்சினையும் மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல. அது நாட்டின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினையும்கூட. இவை இரண்டும் ஒழிக்கப்படாதவரை, எந்த நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை.’ … Read more

2வது டெஸ்ட் : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

மான்செஸ்டர், இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 151 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோ (49 ரன்), ஜாக் கிராவ்லி (38 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து … Read more

பள்ளியில் பயிலும் தன் வருங்கால மனைவி தேர்வில் தோல்வியடைவார் என அஞ்சி பள்ளிக்கு தீ வைத்த இளைஞன்!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் போலீசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த பின்னர், அந்த இளைஞன் தனது சொந்த கிராமத்தில் ஒளிந்து கொள்வதற்காக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் அந்த நபர் பற்றிய அடையாளங்களை … Read more

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு …

பெங்களூரு: ஈத்கா மைதானம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். அந்த மைதானத்திற்கு வக்பு போர்டு உரிமை கொண்டாடி வந்தது. ஆனால் ஈத்கா மைதானம் அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பிற பண்டிகைகளை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதே நேரத்தில் சாம்ராஜபேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தம் … Read more

உலக ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை அனுபமாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் நடந்தது. இதில் பெண்களுக்கான 21 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை அனுபமா 1-4 என்ற பிரேம் கணக்கில் தாய்லாந்தின் பஞ்சயா சன்னோயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். அனுபமா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். வெள்ளிப்பதக்கம் வென்ற அனுபமா விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு … Read more

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறியபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். … Read more

சித்தராமையா ஆட்சியில் அர்க்காவதி லே-அவுட் முறைகேடு குறித்து விசாரணையா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நான் பெருமையுடன் இணைந்து கொண்டுள்ளேன். அது தேசபக்தி கொண்ட பெிய அமைப்பு. ஆனால் சித்தராமையா எந்த அமைப்புடன் இணைந்துள்ளார். கர்நாடகத்தில் பின்தங்கிய சமூகங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ளன. அவர்களுக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை. அந்த சமூகங்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அந்த நிதி மூலம் கல்வி, வேலை வாய்ப்பு, … Read more

தூரந்த் கோப்பை கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி

இம்பால், 20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இம்பாலில் நேற்று பிற்பகலில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஐ.எஸ்.எல். சாம்பியனான ஐதராபாத் எப்.சி.யுடன் (சி பிரிவு) மோதியது. முதல் பாதியில் கோலோச்சிய சென்னையின் எப்.சி. அணி 42-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி கேப்டன் அனிருத் தபா இந்த கோலை அடித்தார். இதனால் சென்னை அணி முதல் பாதியில் … Read more

வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் போராக வெடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. மிக குறுகிய காலத்தில் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என கருதி ரஷியா போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவின்றி நீண்டு கொண்டு இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 6 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் … Read more