74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார், புதிய தலைமை நீதிபதி

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி லலித் 74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார். நவம்பர் 8-ந் தேதி அவரது பதவிக்காலம் முடிந்து விடும். 65 வயதாகிறபோது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்காலமும், 62 வயதாகும்போது ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்காலமும் முடிவுக்கு வரும். 100 நாட்களுக்கும் குறைவான பதவிக்காலத்தை மட்டுமே கொண்டிருக்கும் 6-வது தலைமை நீதிபதி என்ற பெயரை லலித் பெறுகிறார். இதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளாக கமல் நாராயண் சிங் 18 … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய கிரிக்கெட் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன. பரம போட்டியாளரான இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை … Read more

மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘மிஸ் இங்கிலாந்து 2022’ அழகிப் போட்டியில், லண்டன் நகரத்தைச் சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர், ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை … Read more

பாரதீய ஜனதா கட்சி தலைவருடன் மிதாலி ராஜ் திடீர் சந்திப்பு

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்பது உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான 39 வயது மிதாலி ராஜ் கடந்த ஜூன் 8-ந் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் அரசியலில் குதிக்க இருப்பதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. தெலுங்கானாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா … Read more

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் – விராட் கோலி கருத்து

துபாய், 15-வது ஆசிய கோப்பை போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாட உள்ளன. இதில், விளையாடும் இந்திய வீரர் விராட் கோலி தனது 100-வது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்த கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய விராட் கோலி கூறியதாவது ; 2019 ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

இஸ்லாமாபாத், 3.30 கோடி மக்கள் பாதிப்பு பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 … Read more

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை – அமித்ஷா

சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். நக்சலைட்டு பிரச்சினை அப்போது பேசிய அவர், ‘நாட்டில் நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. நக்சலைட்டு பிரச்சினையும், பயங்கரவாத பிரச்சினையும் மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல. அது நாட்டின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினையும்கூட. இவை இரண்டும் ஒழிக்கப்படாதவரை, எந்த நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை.’ … Read more

2வது டெஸ்ட் : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

மான்செஸ்டர், இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 151 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோ (49 ரன்), ஜாக் கிராவ்லி (38 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து … Read more

பள்ளியில் பயிலும் தன் வருங்கால மனைவி தேர்வில் தோல்வியடைவார் என அஞ்சி பள்ளிக்கு தீ வைத்த இளைஞன்!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் போலீசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த பின்னர், அந்த இளைஞன் தனது சொந்த கிராமத்தில் ஒளிந்து கொள்வதற்காக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் அந்த நபர் பற்றிய அடையாளங்களை … Read more

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு …

பெங்களூரு: ஈத்கா மைதானம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். அந்த மைதானத்திற்கு வக்பு போர்டு உரிமை கொண்டாடி வந்தது. ஆனால் ஈத்கா மைதானம் அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பிற பண்டிகைகளை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதே நேரத்தில் சாம்ராஜபேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தம் … Read more