இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்

புதுடெல்லி, 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் (17 வயதுக்குட்பட்டோர்) உலக கோப்பை கால்பந்து போட்டி புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) பெண்கள் நடுவர்கள் கமிட்டி தலைவர் காரி செய்ட்ஸ் அறிவித்துள்ளார். போட்டியின் போது நடுவர்கள் அளிக்கும் முடிவில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், ஆட்டத்தின் … Read more

பாகிஸ்தானில் மீட்புப் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலியான பரிதாபம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர … Read more

தெலுங்கானாவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட 4 பெண்கள் பலி – விசாரணைக்கு உத்தரவு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 25-ந் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பலியானார்கள். இதையடுத்து அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது. குழந்தைகளின் படிப்பு செலவை … Read more

20 ஓவர் போட்டிகளில் முஜீப் உர் ரஹ்மான் புதிய சாதனை

சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் … Read more

வெள்ளக்காடான பாகிஸ்தான்: நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர்கள் தரையிறங்க இடமில்லை – மந்திரி தகவல்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி … Read more

முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்; மோடி மனிதாபிமானம் மிக்கவர் – குலாம்நபி ஆசாத்

புதுடெல்லி, காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் தனது பேட்டியில் பிரதமர் மோடி பற்றி கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி குழந்தைகளோ, சொந்த குடும்பமோ இல்லாதவர். அதனால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். கடந்த 2007-ம் ஆண்டு நான் காஷ்மீர் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காஷ்மீருக்கு சுற்றுலா வந்த குஜராத் பயணிகளின் பஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதில் சிலர் பலியானார்கள். அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த … Read more

ஆசிய கோப்பையில் 7-வது முறையாக பங்கேற்று ரோகித் சர்மா புதிய சாதனை

புதுடெல்லி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அது முதல் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்று வரும் அவருக்கு இது 7-வது ஆசிய கோப்பை போட்டியாகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடியதன் மூலம் 7 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். டோனி, தெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடி … Read more

அமெரிக்க 'டிரோன்'களுக்கு அனுமதி: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஜூலை மாதம்31-ந்தேதி அமெரிக்கா நடத்திய ‘டிரோன்’ தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இந்த சூழலில் இப்போதும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் அடிக்கடி டிரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலீபான் அரசின் ராணுவ … Read more

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் டெல்லி..!! 2-வது இடத்தில் மும்பை

புதுடெல்லி, நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும். இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி

நியூயார்க், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்து விட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முர்ரே … Read more