சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு – வாகன போக்குவரத்து முடக்கம்

காங்க்டாக், சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு சிக்கிம் பகுதியில் பெய்த கனமழையில் சிங்டம் மற்றும் ராங்போ இடையே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 32 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் பாறை போன்றவை சரிந்து விழுந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை எண்-20 மூடப்பட்டு காங்க்டாக் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் இந்த பகுதியில் 2-வது தடவையாக நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு … Read more

சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்த்து திகைத்து போனேன் – விராட் கோலி புகழாரம்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் (68 ரன், 26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி (59 ரன், 44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாசினர். இதில் சூர்யகுமார் கடைசி ஓவரில் 4 பிரமாதமான … Read more

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு : எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்த டான் யெங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான பெண் தலைவர் சாரா பாலினும் போட்டியிட்டார். இவர் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். 2008-ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு ஜான் … Read more

ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் 10-ந்தேதி ஆலோசனை – மோகன் பகவத், ஜே.பி.நட்டா பங்கேற்பு

நாக்பூர், ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய 36 அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது. இம்மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், குடும்ப பண்புகளை பரப்புதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், விசுவ இந்து பரிஷத், … Read more

குறுவட்ட விளையாட்டு போட்டி

விருதுநகர் விருதுநகரில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரு மாணவன் நீளம் தாண்டினர். தினத்தந்தி Related Tags : விளையாட்டு போட்டி

அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த தனியார் பங்கு முதலீடு, பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு நுகர்வு செலவுகள் … Read more

ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை; குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். குமாரசாமி பார்வையிட்டார் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் பெய்த மழை காரணமாக, அந்த தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில், சன்னப்பட்டணாவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். மக்களிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி

துபாய், 6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணியில் சபிர் ரகுமான் (5 ரன்) ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் சில … Read more

கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – உலக வர்த்தக அமைப்பு உறுதி

ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடாக கருதப்படுகிறது. மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங் விளக்கினார். மீன்பிடித்தல் … Read more

'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை தகவல்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தங்களிடம் … Read more