ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அக்டோபர் 7-ந் தேதி தொடக்கம்

மும்பை, 11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது. அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி … Read more

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: இலங்கையை சேர்ந்தவரின் தமிழக சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, இலங்கையை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தனர். தமிழ்நாட்டில் சொத்துகளும் வாங்கினர். இந்தநிலையில், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண … Read more

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவில் தமிழ்நாடு 2-வது இடம்

புதுடெல்லி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் ‘இந்தியாவில் குற்றங்கள்-2021’ என்ற புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு, தேசத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக 5 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட குறைவாகும். தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில், தேசத்துரோக வழக்குகள், அரசாங்க ரகசிய … Read more

இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் – இன்று நடக்கிறது

புதுடெல்லி, இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் கால்பந்து வீரர்கள் பாய்ச்சுங் பூட்டியா, கல்யாண் சவுபே போட்டியிடுகிறார்கள். மேற்குவங்காள மாநில பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான 45 வயதான கல்யாண் சவுபேவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கோல் கீப்பரான இவர் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்கிறார். முன்னாள் கேப்டனான பாய்ச்சுங் பூட்டியா இந்திய அணிக்காக 104 … Read more

சீனாவில் புதிதாக 2,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,818 பேருக்கு … Read more

சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு – வாகன போக்குவரத்து முடக்கம்

காங்க்டாக், சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு சிக்கிம் பகுதியில் பெய்த கனமழையில் சிங்டம் மற்றும் ராங்போ இடையே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 32 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் பாறை போன்றவை சரிந்து விழுந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை எண்-20 மூடப்பட்டு காங்க்டாக் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் இந்த பகுதியில் 2-வது தடவையாக நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு … Read more

சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்த்து திகைத்து போனேன் – விராட் கோலி புகழாரம்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் (68 ரன், 26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி (59 ரன், 44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாசினர். இதில் சூர்யகுமார் கடைசி ஓவரில் 4 பிரமாதமான … Read more

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு : எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்த டான் யெங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான பெண் தலைவர் சாரா பாலினும் போட்டியிட்டார். இவர் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். 2008-ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு ஜான் … Read more

ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் 10-ந்தேதி ஆலோசனை – மோகன் பகவத், ஜே.பி.நட்டா பங்கேற்பு

நாக்பூர், ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய 36 அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது. இம்மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், குடும்ப பண்புகளை பரப்புதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், விசுவ இந்து பரிஷத், … Read more

குறுவட்ட விளையாட்டு போட்டி

விருதுநகர் விருதுநகரில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரு மாணவன் நீளம் தாண்டினர். தினத்தந்தி Related Tags : விளையாட்டு போட்டி