விளையாட்டு போட்டி

விருதுநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் விருதுநகர் குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்று இலக்கினை அடைய சீறி பாய்ந்து பள்ளி மாணவிகளை சென்றனர். தினத்தந்தி Related Tags : விளையாட்டு போட்டி

முருக மடாதிபதி கைது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது- குமாரசாமி கருத்து

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சித்ரதுர்கா முருக மடத்தில் பாலியல் சம்பவம் நடந்திருக்க கூடாது என்பது எனது கருத்து. இது மிகவும் சிக்கலான விஷயம். கர்நாடகத்தில் ஏற்கனவே உணர்வு பூர்வமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அரசு சட்டப்படி எந்த மாதிரியான விசாரணை நடத்த வேண்டுமோ அதை நடத்தட்டும். இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங் ஒரு … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு

சார்ஜா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் 6-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பாபர் அசாம் … Read more

பாகிஸ்தானில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் கனமழை தொடரும் என அறிவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் ஸவாட் பள்ளத்தாக்கு அருகே உள்ள கிராமத்தை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல ஏக்கர் கணக்கிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த … Read more

பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியீடு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி கர்நாடக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் இஸ்மாயில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத் தாக்கல் … Read more

ஹாங்காங்கை பந்தாடிய பாகிஸ்தான் – 'சூப்பர் 4' சுற்றுக்குள் நுழைந்தது…!

சார்ஜா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீக் சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற்றது. இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசம் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த பகர் … Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி – ரணில் விக்கிரமசிங்கே கருத்து

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர். இந்த தொடர் போராட்டம் மிகப்பெரும் புரட்சியாக வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு … Read more

பெங்களூருவில், 5-ந் தேதி தொடங்குகிறது: 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி

பெங்களூரு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. கன்டீரவா உள்ளரங்கம், கோரமங்களா உள்ளரங்கத்தில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்பட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டு … Read more

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்

மும்பை, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கான கேப்டன்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஷேவாக்கும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தினத்தந்தி Related Tags : லெஜன்ட்ஸ் லீக் … Read more