புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ், உ.பி. யோத்தா அணிகள் வெற்றி..!

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இதுவரை 19 ஆட்டங்களில் ஆடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, ஒரு டை, 4 தோல்வி என்று 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன், … Read more

48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கு, உக்ரைன் `கெடு'

1 லட்சம் படை வீரர்கள் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த … Read more

இன்னும் சில நாட்களில் சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை இன்று அறிவிப்பேன்: சஞ்சய் ராவத்

பதிலடி கொடுக்கப்படும் மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. இதேபோல சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மீது கூறப்படும் பொய்யான … Read more

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி..!

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுவிய தேசிய கிரிக்கெட் அகாடமி 2000-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இளம் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை அளிப்பது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிரதான பணியாகும்.  இந்த நிலையில் கூடுதல் வசதி வாய்ப்புகளுடன் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் தேவனஹள்ளி என்ற இடத்தில் 40 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் … Read more

இந்தியாவும், சீனாவும் எல்லை ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் ஜெய்சங்கர் கருத்துக்கு சீனா பதில்

பீஜிங்,  ஆஸ்திரேலியாவில் ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூறும் விதமாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா-சீனா இரு நாடுகளும் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும், எல்லைப் பகுதியில் கூட்டாக … Read more

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி: கர்நாடக ஐகோர்ட்டு

ஆன்லைன்சூதாட்டங்களுக்கு தடை கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அரசு தடை விதித்திருப்பதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. தடை விதிப்பது சரியல்ல அதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிபதிகள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் … Read more

பிரான்சில் உள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..!

பாரிஸ்,  தெற்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) காலை தெற்கு பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.  இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட … Read more

விடுதி உரிமையாளருடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது

பெரும்பாவூர், கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரின்சினா (வயது 26). இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்தார். பின்னர் இருவரும் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி … Read more

‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. ஜூனியர் வீரர்களில், இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் … Read more