பசுமை ஹைட்ரஜன், அமோனியா குறித்த கொள்கை: மத்திய அரசு வெளியிட்டது
புதுடெல்லி, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா குறித்த மத்திய மின்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட கொள்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மரபுசாரா எரிசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, ஹைட்ரஜனும், அமோனியாவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா என்று அழைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இவை உருவெடுக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாக கருதப்படுகின்றன. இதன்மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். தூய்மையான எரிபொருளை அளிக்க வேண்டிய சர்வதேச கடமையை இந்தியா பூர்த்தி … Read more