2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு – பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் ஜுனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:- இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் … Read more

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி

லண்டன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது. ஆஷஸ் தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை நீக்கவும் கோரிக்கைகள் … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார். சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி; உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே அறிவிப்பு

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் குறிப்பாக 20 ஆண்டுகள் பகையை மறந்து உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கைகோர்த்த சம்பவம் ஆகும். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியதால், கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து … Read more

கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

புதுடெல்லி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் … Read more

உலகம் ஒரு பார்வை: 2025-ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி 7, 2025 அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். ஜனவரி 7, 2025 சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் … Read more

தண்டவாளத்தில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர்; வந்தே பாரத் ரயில் மோதியதால் பயணிகள் அதிர்ச்சி

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் காசர்கோடு–திருவனந்தபுரம், மங்களூரு–திருவனந்தபுரம் வழித்தடங்களில் “வந்தே பாரத்” ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு ரயில்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு மற்றும் மதுரைக்கு “ஸ்லீப்பர் வந்தே பாரத்” மற்றும் “நமோ பாரத்” ரயில்களையும் இயக்கும் திட்டம் உள்ளது. இந்த நிலையில், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று இரவு சென்ற வந்தே பாரத் ரயில், ஒரு ஆட்டோ மீது மோதியது. வர்க்கலா அருகே வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது, … Read more

பயிர் நிவாரணம்- ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்குப் பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி நிவாரணத் தொகை ஒப்பனிப்பு செய்து முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டது. வேளாண்மைத் துறைக்கு தலையாய இடம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென 5 … Read more

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள், கடைகள் குலுங்கின

தைப்பே, தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 11.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து கிடந்தன. 2016-ம் ஆண்டு, தைவானின் தெற்கே ஏற்பட்ட … Read more

ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் – அருங்காட்சியகம்; பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நினைவிடம் வளாகத்தில் பா.ஜனதா சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் தலைவர்களின் … Read more