சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகுதா?

சென்னை: வணங்கான் படத்தை முடித்து விட்டு இயக்குநர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படத்தை சூர்யா தொடங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் அறிவிப்பு வெளியாகி இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சென்னையில் இன்று கோலாகலமாக சூர்யா 42 படத்திற்கு பூஜையும் போடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிப் பாதையில் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் … Read more

கொச்சியில் புதிதாக பிரம்மாண்ட வீடு வாங்கிய மோகன்லால்.. மம்மூட்டி கொடுத்த சர்ப்ரைஸ் விசிட்!

கொச்சி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வாங்கி புணரமைத்துள்ள பிரம்மாண்ட வீட்டிற்கு நடிகர் மம்மூட்டி விசிட் அடித்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கேரள சினிமா உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி கெத்துக் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இருவருக்கும் இடையே உள்ள நட்பும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை இளம் போட்டி நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிப்பு அரக்கர்கள் தேசிய விருது … Read more

தனுஷின் முன்று விதமான நடிப்பை மெய்சிலிர்த்து பாராட்டிய இயக்குநர் அமீர்

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் பல தரப்பட்ட விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியாக மாறன் படத்தில் நடித்திருந்த அமீர் அடுத்ததாக படம் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குநர் அமீர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார். அமீர் வித்தியாசமான கதைக் களத்தோடு நடிகர்களிடம் வித்தியாசமான நடிப்பை வாங்குவதில் தன்னுடைய குரு பாலாவைப் போலவே இவரும் கில்லாடி. கலர்ஃபுல்லான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜீவாவை ஒரு முழுமையான … Read more

பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்ஷன்ல சிரஞ்சீவியா?: அதனாலதான் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னாரா மணிரத்னம்

ஐதராபாத்: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் நேற்று ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரமாண்டமாக வெளியான சோழா சோழா மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள … Read more

ஞானவேல் ராஜா, அப்பா மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரால்தான் நடிக்க வந்தேன்… கார்த்தி ஃப்ளாஷ்பேக்

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆன பின்பும் கூட அந்தப் படத்தின் புரமோசன்கள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வழக்கம் போல பேட்டிகள் மட்டும் கொடுக்காமல் இந்த முறை ரசிகர்களையும் நேரில் சந்தித்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார் கார்த்தி. இந்நிலையில் தான் எவ்வாறு நடிக்க வந்தேன் என்ற கதையை கார்த்தி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். சிறு வயதில் முடிவு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களும் நடிகர் கார்த்தியும் ஒரே … Read more

அந்த மாதிரி படத்தில் நடிக்கிறாரா ஜகமே தந்திரம் நடிகை.. ஜாக்கெட் அணியாமல் படு கவர்ச்சி போஸ்!

சென்னை: சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் சஞ்சனா நடராஜன். இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரகிட ரகிட பாடலில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே … Read more

முதல் பாகத்தில் இருந்த புதிர்களுக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்ததா?: ஜீவி 2 திரை விமர்சனம்

சென்னை: வெற்றி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘ஜீவி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. விஜே கோபிநாத் இயக்கியிருந்த இப்படத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதியிருந்தார். ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனம் இதோ. திரைக்கதையில் அசத்திய ஜீவி பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் 2019ல் வெளியான ‘ஜீவி’ திரைப்படம், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என வித்தியாசமாக உருவாகியிருந்தது. மிஸ்ட்ரி … Read more

SIIMA Awards 2022…தமிழில் சிறந்த நடிகர் யார்…பரிந்துரைக்கப்பட்ட அந்த 6 பேர் இவங்க தான்

சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், … Read more

தனுஷ் பட ஹீரோயினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அம்மாவான சந்தோஷத்தில் சோனம் கபூர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா படத்தின் மூலம் ரன்பீருக்கு ஜோடியாக பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் சோனம் கபூர். தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் சோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்தார். சோனம் கபூர் ஸ்லம்டாக் மில்லியனர், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலேயே நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் … Read more

திரைக்கதைக்கு பெயர் பெற்ற தமிழ் திரையுலகம்..லாஜிக் இல்லா மேஜிக் வைத்து எத்தனை நாள் ஜெயிக்க முடியும்?

இயக்குநர் இமயம், சிகரம், பாக்யராஜ், விசு என திரைக்கதைக்காக பெயர் பெற்ற தமிழ் திரையுலகம் வலுவான திரைக்கதை இல்லாமல் தள்ளாடுகிறது. போதாத குறைக்கு பான் இந்தியா படம் என வன்முறை பட்ஜெட் படங்கள் வேறு. மீளுமா திரையுலகம். தமிழில் பல வலுவான திரைக்கதை உரையாடல் ஆசிரியர்கள் இருந்தனர், தற்போது இயக்குநர்களே அத்தனையயும் தீர்மானிக்கின்றனர் இதனால் வலுவில்லாத படங்கள் வருகின்றன என இயக்குநர் வசந்தபாலன் போன்றோரே விமர்சிக்கின்றனர். திரைக்கதை இல்லாமல் இயக்குநர்களே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள் என திரைக்கதை … Read more