பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் அவரது கார் மீது செருப்பு, கற்களை வீசி … Read more

எஸ்ஐஆர் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நவ.11-ல் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் … Read more

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லாரிசா நேரி என்ற அந்தப் பெண் தனது வீடியோவில், “நண்பர்களே, அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அது ஒரு பழைய புகைப்படம். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது எனக்கு 18 அல்லது 20 வயது இருக்கும். இந்த விவகாரம் … Read more

“ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி” – கிருஷ்ணசாமி திட்டவட்டம்

மதுரை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் … Read more

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக … Read more

”‘ஆப் ஆப்’னு சொல்லி ஆப்பு வைத்துவிடாதீர்கள்”- மதுரை ஆட்சியரிடம் செல்லூர் ராஜு நகைச்சுவை

மதுரை: ”ஆப், ஆப் என்று சொல்லிட்டு எங்களுக்கு கடைசியில ஆப்பு வைத்துவிடாதீர்கள்” என்று எஸ்ஐஆர் தொடர்பாக மனு கொடுக்க சென்ற இடத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு நகைச்சுவையாக கூறியது, அவருடன் சென்ற அதிமுகவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் நகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் … Read more

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களுக்கு இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் … Read more

இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார் ராகுல் காந்தி – நாராயணன் திருப்பதி

சென்னை: இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் நடைபெற்ற ஹரியானா தேர்தல்கள் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கள் வெறும் புலம்பலேயன்றி வேறில்லை. தொடர் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியின் எல்லைக்கே இட்டுச் சென்று விட்டது என்பதை தான் அவரின் ஆதாரமற்ற, … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகளும் பதிவாகிய நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 … Read more

நவ. 7ல் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா – தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பாஜக வேண்டுகோள்

சென்னை: நாளை நடைபெற உள்ள வந்தே மாதரம் தேச பக்திப் பாடலின் 150 வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஊக்குவித்து குடும்பத்துடன் … Read more