“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி … Read more

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் … Read more

திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட விடாதது பேசுபொருளாகி இருக்கிறது. கரூரில் செப்டம்பர் 27-ல் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஒரு மாதத்துக்கும் மேலாக ‘சைலண்ட்’ மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை … Read more

‘பிஹாரில் தே.ஜ.கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும்' – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ‘வாக்காளர்களிடையே காணப்படும் உற்சாகம், தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று இரண்டு பேரணிகளில் உரையாற்ற உள்ளார். அராரியா மாவட்டத்தின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் பகல்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் … Read more

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் … Read more

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் … Read more

“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” – பேரவைத் தலைவர் அப்பாவு கருத்து

நெல்லை: “தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில், சமூக நல்லிணக்க பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப், துறவியர் பேரவை மற்றும் தோழமை கல்வி நிறுவனங்கள் இணைந்து மாநில அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழாவை நடத்தின. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாநகராட்சி … Read more

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் அவரது கார் மீது செருப்பு, கற்களை வீசி … Read more

எஸ்ஐஆர் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நவ.11-ல் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் … Read more

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன?

இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லாரிசா நேரி என்ற அந்தப் பெண் தனது வீடியோவில், “நண்பர்களே, அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அது ஒரு பழைய புகைப்படம். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது எனக்கு 18 அல்லது 20 வயது இருக்கும். இந்த விவகாரம் … Read more