திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை … Read more

நயினாரை ‘டார்கெட்’ செய்யும் டிடிவி தினகரன்: பின்னணியில் அண்ணாமலையா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அடுத்த விக்கெட்டாக வெளியேறியிருக்கிறார் டிடிவி தினகரன். தான் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று அவர் சொன்னதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது. மேலும், அவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இப்போது பாஜகவின் ஒரே இலக்கு. இதன் காரணமாகவே, பல்வேறு வியூகங்கள் மூலமாக அதிமுகவை வளைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்தார்கள். இதையெல்லாம் விட முக்கியமாக, தங்கள் … Read more

ஜார்க்கண்டில் வறுமை காரணமாக ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு 

ராஞ்சி: உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத ஆண் குழந்​தையை ரூ.50 ஆயிரத்​துக்கு … Read more

“அதிமுக கட்சியே ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமை விரைவில் வரும்” – உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: “அதிமுக கட்சி விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மருத்துவத் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ரூ.28.75 கோடியில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அவர் ஒரு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு

புவனேஸ்வர்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி சஸ்மித் பத்ரா, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஜேடி எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிவை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் அரசியல் விவகாரக் குழு, எம்பிக்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு இணங்க இந்த … Read more

“பாஜக நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை” – கே.பி.ராமலிங்கம்

நாமக்கல்: “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்பட யாரையும், பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்” என மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் செப்.19, 20, 21 ஆகிய நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் பாஜகவினர் திரளாக பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். அதில், … Read more

பிஜேடி போலவே பிஆர்எஸ் கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ஹைதராபாத்: பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியைப் போலவே, பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கட்சித் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாஜக … Read more

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

கீவ்: ‘‘ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார். அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ ராணுவ படை​யில் சேர உக்​ரைன் திட்​ட​மிட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து உக்​ரைன் மீது ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 3 ஆண்​டு​களுக்கு மேல் இருதரப்​புக்​கும் இடை​யில் மோதல் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், உக்​ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்​பெரிய வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் தாய், 3 … Read more

“தமிழகத்தில் பாஜக கூட்டணிக்குள் நடப்பது மன வருத்தம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான்தான் காரணம் என கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தற்போது கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திர கிரகணம் இரவு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. தற்போது தமிழகத்தில் கிரகணம் பிடித்த ஆட்சி உள்ளது. அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். கடந்த … Read more

Bihar SIR: ஆதாரை செல்லத்தக்க ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதார் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை ஏற்கிறது. … Read more