ஜென் Z போராட்டத்தால் ஸ்தம்பித்த நேபாளம்: 14 பேர் பலி, 100+ காயம்; பின்னணி, நிலவரம் என்ன?

காத்மாண்டு: நமது அண்டை நாடான நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக … Read more

தமிழகத்தில் தொழில் தொடங்க 10 புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

பாஜக எம்பி.க்களின் 2 நாள் பயிற்சிபட்டறை: கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ​பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது. நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில் மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை கொண்டு வந்த … Read more

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு – ஜெலன்ஸ்கி ஆதரவு

கீவ்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரியை ஆதரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை உக்ரைனுக்கு எதிராக 810 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ்வில் உள்ள அரசு … Read more

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. சில காலமாகவே மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் மல்லை சத்யா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அவரை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார். … Read more

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை) இருந்து கடன்களைப் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறும் கடன்களின் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2025, ஜூன் 30 நிலவரப்படி … Read more

ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல்

லண்டன்: ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூ கி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தனது … Read more

மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர்

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக கோவை மாவட்​டம் காரமடை மற்​றும் பெரிய​நாயக்​கன்​பாளை​யம் பகு​திக்கு சாலை செல்​கிறது. இந்த சாலை​யையொட்டி அடர்ந்த வனப்​பகு​தி​கள் மற்​றும் தேயிலை தோட்​டம் உள்​ள​தால் வன விலங்​கு​களின் நடமாட்​டம் அதி​க​மாக காணப்​படு​கிறது. இதனால் இரவு நேரங்​களில் அந்த பகு​தி​யில் வாகன போக்​கு​வரத்துக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. … Read more

பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று (திங்கள்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக பிஹாரில் எட்டு இடங்களிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இடத்திலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களிலும் இன்று என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாத சதி தொடர்பான உளவுத்துறை … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அடுத்தக்கட்ட வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2-ம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25% கூடுதல் வரிக்கு ஆளாகியுள்ள இந்தியாவுக்கு இன்னுமொரு அடியாக அமையும். ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. … Read more