அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் வாக்காளர் … Read more

மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, … Read more

“சமத்துவ நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன்” – வைகோ

மதுரை: திருச்சி முதல் மதுரை வரை 10 நாள் மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தின்போது, திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஜன.2 முதல் 12-ம் தேதி வரை 180 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. … Read more

சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் … Read more

மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா

டாக்கா: தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷேக் ஹசீனா, “ஜனநாயகப்பூர்வமாக … Read more

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் நவ.21-ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் … Read more

பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு – முதல்வர் யார்?

பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் … Read more

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டாக்கா: கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்கியது. இதன் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனா (78) இந்தியாவில் தஞ்சமடைந்தார். கடந்த ஆண்டு … Read more

பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த … Read more