நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மூடனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சே கவுடா (55). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கர்நாடக வனத்துறை இடத்துக்கு அருகில் இருந்தது. இதனால் வனத்துறை அந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. தனது நிலத்துக்கு உரிய இழப்பீடை உடனடியாக வழங்குமாறு மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சே கவுடா மனு அளித்தார். ஆனால் அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளது. இந்நிலையில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் … Read more