விஜய்யின் ‘சனிக்கிழமை’ சுற்றுப் பயண ரகசியம்: தவெக தொண்டர்கள் மனநிலை என்ன?

ஒருவழியாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை அறிவித்திருக்கிறார் விஜய். ஆனால் ‘சனிக்கிழமை’ மட்டும்தான் வண்டி ஓடும் எனும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள அவரின் பயணத் திட்டம், தவெக-வில் சலசலப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே, ‘பனையூர் பார்ட்டி’, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம் பார்ட்டி’ எனும் விமர்சனங்களை தாங்கும் தவெக தொண்டர்கள், இப்போது ‘வீக் எண்ட் பார்ட்டி’ எனும் வார்த்தைகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பது விஜய்யின் பிரபலமான பஞ்ச். அதேபோல, … Read more

நிலம் உள்வாங்கியதில் காஷ்மீரில் 50 கட்டிடங்கள் சேதம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்’’ என்றார். கலாபன் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம் – மீண்டும் செயல்பட தொடங்கிய காத்மாண்டு விமான நிலையம்

காத்மாண்டு: நேபாளத்தின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. ஃபஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் இளைஞர்கள் கடந்த 8-ம் தேதி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் … Read more

“இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

மதுரை: “வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்” என்று டிடிவி தினகரன், செங்கோட்டையன் விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய: “எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி மலர, பழனிசாமி இரவு, பகலாக உழைத்து வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார். அதிமுகவில் குட்டையை … Read more

அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை ஆளுநர் மறுக்க முடியும் என்றும், அரசியலைப்பை பாதுகாக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றம் குடியரசு தலைவர் ஆகியோருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் கோரி … Read more

பிரான்ஸில் தொடங்கிய 'அனைத்தையும் தடுப்போம்' போராட்டம் – 200 பேர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரான்சுவா பேய்ரு பதவியை ராஜினமா செய்தார். புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் … Read more

கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே தொழிற்சாலையில் கடந்த 2021-ஆம் … Read more

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் … Read more

சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த பொது மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் … Read more

விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை … Read more