சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த பொது மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் … Read more

விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை … Read more

“வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் … Read more

நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த நாடு​களில் ஒன்​றாக நேபாளம் திகழ்​கிறது. அந்நாட்டின் சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு … Read more

பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி.முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு உடனடியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சேபனை … Read more

‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல நியாயமாக, பாரபட்சமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு … Read more

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

வாஷிங்டன்: இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில் 25% வரி விதிப்பும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதாமாக 25% வரி விதிப்பும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது என குறிப்பிட்டுள்ள இந்தியா, ஏற்றுமதிக்கான … Read more

நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி

சென்னை: வறுமையில் வாடும் விவசாயிகளிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் … Read more

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி என்று பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. மீதமுள்ள 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. நேற்று … Read more

30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்; நேபாள அரசமைப்பை திருத்தவும் – ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனை!

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். … Read more