புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலை​யத்​திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் பனாரஸ்​–கஜு​ராஹோ, லக்​னோ–ஷஹா​ரான்​பூர், பிரோஸ்​பூர்​–டெல்​லி, எர்​ணாகுளம்​–பெங்​களூரு ஆகிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும். வாராணசி​யில் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா சர்​வ​தேச அளவில் பொருளா​தார வளர்ச்​சி​யில் மிக வேக​மாக வளர்ந்து கொண்டு இருக்​கிறது. தற்​போது, இந்​திய ரயில்​வே​யில் வந்தே பாரத், நமோ பாரத், … Read more

ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல் 

சென்னை: ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் தப்​பிக்க வைத்​து​விட்​டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான வழக்​கறிஞர் ஆனந்​தன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் தெரிவித்​துள்​ளார். பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை​யில் சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டின் அருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை … Read more

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கூறிய​தாவது: சம்பவ இடத்​துக்கு சமஸ்​திபூர் மாவட்ட ஆட்​சி​யர் நேரில் … Read more

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்

வாஷிங்டன்: இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 … Read more

59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ​​நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானின் பிறந்​த​நாளையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்​கப்​பட்​டது. நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தனது 59-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரி​விப்​ப​தற்​காக காலை முதலே சென்னை நீலாங்​கரை​யில் உள்ள அவரது வீட்​டில் ஏராள​மான தொண்​டர்​களும், கட்சி நிர்​வாகி​களும் குவிந்​தனர். சீமானுக்கு வாழ்த்​துக் கூற வருகை தந்த தொண்​டர்​களுக்​காக அவரது வீட்​டில் தடபுடலான கறி … Read more

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு … Read more

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் … Read more

புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் குளறுபடி: அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தெரு நாய்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது தொடர்பாக … Read more

மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் … Read more

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த … Read more