ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார். … Read more

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்​வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்​கத்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் நான் முதல்​வன் (போட்​டித் தேர்​வு​கள் பிரிவு) சிறப்​புத் திட்ட இயக்​குநர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்த ஊக்​கத்​தொகை வழங்கும் திட்​டத்​தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்​கு, முதல்​நிலை தேர்​வுக்கு தயா​ராகும் வகை​யில், 10 மாதங்களுக்​கு மாதம் ரூ.7,500-ம் முதல்​நிலை தேர்​வில் தேர்ச்சி … Read more

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

புதுடெல்லி: உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார். கடந்த 2013-ம் ஆண்​டில் அவர் நிர்​வாகத்​துக்கு எந்த தகவலும் கூறாமல் காணா​மல் போய் உள்​ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். கான்​பூரின் பிரபல ஜிஎஸ்​விஎம்​சி.​யின் தகவல்​களின்​படி, டாக்​டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிர​யாக்​ராஜ் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் பட்​டம், டிசம்​பர் 2003-ல் மருந்​தி​யலில் முதுகலைப் பட்​டம் … Read more

டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டெல்​டா ​மாவட்​டங்​களில்​ நவ.17, 18-ம்​ தே​தி​களில்​ க​னமழைக்​கு வாய்​ப்​பு இருப்​ப​தாக சென்னை வானிலை ஆய்​வு மை​யம்​ தெரிவித்துள்ளது. இதுகுறித்​து மைய aஇயக்​குநர்​ ​பா.செந்​தாமரை கண்​ணன்​ வெளி​யிட்​ட செய்​தி​க்​குறிப்​பு: தென்​மேற்​கு, தென்​கிழக்​கு வங்​கக்​கடல்​ பகு​தி​களின்​ மேல்​ ஒரு வளிமண்​டல கீழடு​க்​கு சுழற்​சி நில​வுகிறது. இதன்​ ​காரண​மாக, தமிழகத்​தில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புதுச்​சேரி, ​காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ இன்​று (நவ.13) ​முதல்​ 17-ம்​ தே​தி வரை லே​சானது ​முதல்​ மிதமான மழை பெய்​யக்​கூடும்​. 17-ம்​ தே​தி தஞ்​சாவூர்​, ​திரு​வாரூர்​, ​நாகப்​பட்​டினம்​, … Read more

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

பெங்களூரு: தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர். தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, … Read more

அண்ணாமலை ‘ரிட்டர்ன்’ சலசலப்பு – மாற்றத்துக்கு தயாராகிறதா தமிழக பாஜக?

2021-ல் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை லைம்லைட்டில் வைத்திருந்தார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் தலைவரான பின்னர் பாஜக சுணக்கமாகி விட்டதாக ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை – நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுந்துள்ள பிரளயம்தான் பாஜகவில் இப்போது ஹாட் டாபிக். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் தினம் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றபடி இருந்தார். தடாலடி பேச்சுகள், திமுக மீதான கடும் எதிர்ப்பு … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூடானில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களை, டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் நேற்று சந்தித்தார். அவர்களுடைய உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் … Read more

தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன். இவர் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி. மேலும், இதில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து கவலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என உறவினர்கள் வசம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது … Read more

பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 122-ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் வழியாக 90 கி.மீ பயணிக்கும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 30 கி.மீ பயணித்து தமிழகத்தில் புல்லூர் என்ற இடத்தில் நுழைந்து அகண்ட பாலாறாக தமிழ்நாட்டில் 222 கி.மீ தொலைவுக்கு ஓடி செங்கல்பட்டு மாவட்டமவயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பாலாற்றில் பல்வேறு கால … Read more