“தாடி வளர்க்காதீர்.. திருமணம் செய்து கொள்ளுங்கள்!” – ராகுல் காந்திக்கு அறிவுரை கூறிய லாலு பிரசாத்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் “தாடி வளர்க்காதீர்கள்! திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவுரை கூறினார். இதனை அவர், தனது பாணியில் செய்தியாளர்களிடம் கூறியபோது பெரும் சிரிப்பலை உருவானது. பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்தது. இந்த சிறைவாசத்தின் போது உடல்நலம் குன்றியவருக்கு, வெளிநாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஜாமீன் பெற்ற … Read more

எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம் – வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை; ரஷ்ய அதிபருக்கு புதிய நெருக்கடி

மாஸ்கோ: “ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்” என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் … Read more

மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

கோவை: வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் பெரிய உருவமுடைய ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை உண்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் வாயில் காயத்துடன் இந்த யானை செல்வதை வனப் பணியாளர்கள் … Read more

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்கு 337 கம்பெனி மத்திய படை தயார்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வன்முறைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 822 கம்பெனி துணை ராணுவப் படைகளை, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் 337 கம்பெனி (33,700 வீரர்கள்) துணை ராணுவப் படைகளை அனுப்புவதாக மாநில … Read more

‘ஜனநாயகம் எங்கள் உணர்வில்' – பிரதமர் மோடி பேட்டி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்ற பெருமையை இந்தியா நீண்ட காலமாக கொண்டுள்ளது. ஆனால், உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அதைப் பற்றி விமர்சிப்பவர்களை அடக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அவர்களின் உரிமைகள் மேம்படவும், சுதந்திரமான … Read more

மாவட்டத்துக்கு ஒரு ‘நடைப்பயிற்சி பாதை’ – மக்களின் கவனம் ஈர்க்கும் ‘ஹெல்த் வாக்’ திட்டம்

மதுரை: மாவட்டத்துக்கு ஒரு நடைப்பயிற்சி பாதை என்ற அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் ‘ஹெல்த் வாக்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சுகாதார விழிப்புணர்வுத் திட்டமாக ‘ஹெல்த் வாக்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதில், மாவட்டந்தோறும் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி … Read more

இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளிவரும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தயாரான முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவிலும் அதுபோன்ற தொழிற்சாலையை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான … Read more

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் உடைந்தது எப்படி?

நியூஃபவுண்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஈடுபட்டது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இதில் பைலட் உட்பட 5 பேர் பயணம் செய்ய முடியும். ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட, டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தை ஓசன்கேட் தொடங்கியது. இந்த சாகச சுற்றுலா மூலம், டைட்டானிக் … Read more

பாட்னாவில் தமிழர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நேற்று நடத்திய கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அப்போது பாட்னா தமிழ்ச் சங்க தலைவர் என்.சரவணகுமார் ஐஏஎஸ், செயலாளர் மகாதேவன் தலைமையில் 20 தமிழர்கள் முதல்வரை சந்தித்தனர். இதில், ஐஏஎஸ் அதிகாரிகளான கே.செந்தில்குமார், தியாகராஜன், சஜ்ஜன், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ரவீந்திரன் சங்கரன், அவரது மனைவி மலர்விழி, ஐஎப்எஸ் அதிகாரி கணேஷ்குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். அனைவரையும் தனித்தனியாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் … Read more

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் – பாஜகவுக்கு எதிராக 17 கட்சிகள் முடிவு | விரிவான விவரம்

பாட்னா: நிதிஷ்குமார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, இக்கூட்டத்தை நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிஹார் முதல்வரும், … Read more