திருப்பூர் காதர் பேட்டையில் பயங்கர தீ விபத்து: 50+ கடைகள் எரிந்து நாசம்

திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் கடைகள் இன்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின. திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் இயங்கி வlருகின்றன. இதனிடையே, இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. … Read more

‘டைம் ஆஃப் டே’ மின் கட்டணம் அறிமுகம், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகள் சீரமைப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: டைம் ஆஃப் டே மின் கட்டணம் அறிமுகம், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை எளிமைப்படுத்தி, மத்திய அரசு மின்சார (நுகர்வோர்உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் இரண்டு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டைம் ஆஃப் டே (டிஓடி) கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகியவை அந்த மாற்றங்களாகும். … Read more

“அனைத்து மதங்களுக்கும் இல்லமாக இருக்கிறது இந்தியா!” – அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை | முழு வடிவம்

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ … Read more

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ‘ஆதனின் பொம்மை’ நாவலுக்காக பாலசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதய சங்கருக்கும், ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புரஸ்கார் வென்றுள்ள ராம் தங்கத்துக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் … Read more

தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் – உத்தவ் தாக்கரே 

மும்பை: தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்பாக தாக்கரே இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா (யுடிபி) வின் கட்சிப் பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியும், சந்திர சேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரீய சமிதியும் தேசிய அளவிலான நோக்கங்களைக் கொண்டுள்ளன என்றாலும் அது மறைமுகமாக பிரதமர் மோடிக்கும், சர்வாதிகாரத்துக்கும் உதவி செய்யும். இந்த … Read more

இந்தியா – பசிபிக் அமைதி, பாதுகாப்புக்கு முன்னுரிமை: அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா-அமெரிக்கா உறவுகளின் … Read more

“பாட்னா கூட்டத்தில் நான் முன்வைத்த தேர்தல் யோசனைகள்…” – முதல்வர் ஸ்டாலின் பகிர்வு

சென்னை: “பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும், ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவிலே ஏற்பட்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்து சென்னை விமான நிலையம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

பாஜக அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்: பாட்னா கூட்டத்துக்குப் பின் நிதிஷ் அறிவிப்பு

பாட்னா: பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் … Read more

பிரதமர் மோடிக்கான வெள்ளை மாளிகை விருந்தில் முகேஷ் அம்பானி, சுந்தர் பிச்சை மற்றும் பலர்!

வாஷிங்டன்: அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் அரசு முறை விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். முக்கியமாக இந்த விருந்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அவரது மனைவி அஞ்சலி பிச்சை, மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, மைக்ரோசாப்ட் சிஇஓ … Read more

பாளை. சிறையில் இளைஞர் மரணம்: நீதி விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “தென்காசியைச் சேர்ந்த இளைஞர் தங்கசாமியின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த தங்கசாமி என்ற 26 வயது இளைஞர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் … Read more