எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் – எலான் மஸ்குக்கு அழைப்பு விடுக்கும் கர்நாடகா

பெங்களூரு: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சரியான இடம் கர்நாடகா என்றும் எனவே, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருமாறும் எலான் மஸ்குக்கு கர்நாடகா அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த எலான் மஸ்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க், “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைப் பற்றி உண்மையிலேயே … Read more

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குக் காரணமான ‘Catastrophic Implosion’ என்றால் என்ன?

அட்லாண்டிக்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அதாவது மிகை அழுத்ததின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இம்முறையிலான வெடிப்பை நிபுணர்கள் ’catastrophic implosion’ என்று விவரிக்கின்றனர். இதில் catastrophic என்பதற்கு பேரழிவு என்றும் implosion என்பதற்கு பெரு வெடிப்பு என்றும் பொருள். Explosion என்பது மிகை அழுத்தத்தினால் ஒரு பொருள் வெளிப்புறமாக … Read more

15 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைகிறது புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம் 15 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்ட உள்ளதாகவும், அதற்கு ஜூலை 15-க்குள் ஒப்பந்தம் கோரப்படும் என்றும் பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் புதிய சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி ரூ.440 கோடியில் தலைமை செயலகத்துடன் இணைந்த புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது. இதற்காக கட்டிட வடிவமைப்பை டெல்லியை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே … Read more

பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் – ஜெ.பி.நட்டா விமர்சனம்

புவனேஸ்வர்: பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். ஒடிசாவின் பவானிபட்னா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா உரையாற்றினார். அவரது உரை விவரம்: “பாட்னாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் பாட்னாவில் பிறந்து, அங்கே பள்ளிக் கல்வியை கற்றவன் என்பதால், எனது சிறு வயது நாட்கள் நினைவுக்கு வந்தன. ராகுல் காந்தியின் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா … Read more

பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – ஒபாமா

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் … Read more

கோயில் திருவிழாவில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மலக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை … Read more

‘இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை யார்?’ – பாட்னா கூட்டத்தை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

பாட்னா: பிஹாரில் நடந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்து அம்மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், ‘இந்த திருமண ஊர்வலத்தின் மாப்பிளை யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிஹார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்தக்கூட்டம் குறித்து … Read more

சாதி, மதம், பாலினப் பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை: அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி

வாஷிங்டன்: சாதி, மதம், பாலினப் பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று,பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து … Read more

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத … Read more

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் – அமித் ஷா குற்றச்சாட்டு

ஜம்மு: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். மேலும், பாட்னாவில் ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளை புகைப்படக் காட்சிக்காக ஒன்றுகூடியுள்ளதாக அவர் விமர்சித்தார். ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித் ஷா, ஜம்மு நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி … Read more