பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா – அமெரிக்கா கூட்டறிக்கை

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனை குறித்தும் கூட்டறிக்கை குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் … Read more

பயனர் பாதுகாப்பு சார்ந்த புதிய விதிகளுக்கு இணங்க ட்விட்டர் மேம்பட வேண்டும்: ஐரோப்பிய யூனியன்

சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு தளங்களில் உலாவும் பயனர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவலை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்துவது தான் திட்டம். இந்த புதிய சட்ட விதிக்கு இணங்க முன்னணி சமூக … Read more

கரூரில் மீண்டும் வருமான வரித் துறையினர் சோதனை

கரூர்: கரூரில் உணவக பங்குதாரர்கள் வீடுகளில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் வருமான வரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது 5 இடங்கள் சீல் வைக்கப்பட்டன. வருமான வரித் துறை சோதனையைத் தொடர்ந்து ஜூன் 13-ம் தேதி கரூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை … Read more

‘பிஹாரை வென்றால் நாட்டை வெல்லலாம்’ – பாட்னா கூட்டத்துக்கு முன்னர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

பாட்னா: “பிஹாரில் வெற்றி பெற்றால், நாம் நாடு முழுவதும் வெற்றி பெற முடியும்” என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாட்னா எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் பேசிய கார்கே இதனைத் தெரிவித்தார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிஹார் தலைநகர் பாட்னாவில் கூடியுள்ளனர். அம்மாநில முதல்வர் … Read more

கரோனா முதல் டைட்டன் விபத்து வரை.. ‘The Simpsons' முன்கூட்டியே கணித்த நிகழ்வுகள்

டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏதாவது ஒரு மிகப்பெரிய விபத்து அல்லது நிகழ்வு நடக்கும்போது சிம்ப்ஸன்ஸ் தொடரின் பெயரும் அடிபடுவது இது முதல் முறையல்ல. கரொனா வைரஸ் தொடங்கி உக்ரைன் போர் வரை ஏராளமாக விஷயங்களை ஆச்சர்யமூட்டும் வகையில் ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர். ஸ்மார்ட்வாட்ச்: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் … Read more

உயர் கல்வித்துறை அரசாணை-161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: உயர் கல்வித்துறை அரசாணை-161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அது முடிவுறும் தறுவாயில் உள்ளது. இச்சூழலில் பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன், மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்குவதாகவும் உள்ளது. … Read more

வீடுகளுக்கு சென்று 11 வகை சான்றிதழ் வழங்கும் திட்டம் – ஆந்திராவில் இன்று முதல் அமல்

அமராவதி: ஆந்திராவில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 11 வகையான சான்றிதழ்களை வழங்கும் ‘ஜெகனண்ணா சுரக்‌ஷா’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு, ‘ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம்’ என்ற திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ’ஜெகன் அண்ணா சுரக்‌ஷா திட்டம்’ என்ற மற்றொரு புதிய திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம் என்ற திட்டம் மூலம் … Read more

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆடும் அமெரிக்க இளைஞர்கள்: வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவின் இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுவதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர … Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம்

சென்னை: கிராமப்புறங்களில் அரசின் சொத்துகளைப் பாதுகாப்பது, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வருவாய்த் துறையின் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 12,256 கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன் அவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலர் தமிழ்ச் செல்வன் … Read more

எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் இன்று கூட்டம் – நல்ல தொடக்கம் என திரிணமூல் காங்கிரஸ் கருத்து

கொல்கத்தா: மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் பிஹாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து … Read more