"இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்" – அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வாஷிங்டன்: இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என்று அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை … Read more

நடிகர் விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் – நயினார் நாகேந்திரன் கருத்து

திருநெல்வேலி/கோவை: “நடிகர் விஜய் உள்ளிட்ட யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘அடுத்த முதல்வர் நடிகர் விஜய்’ என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சியும் அல்ல. ‘நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு’ என சொல்வது … Read more

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் இதயங்களை இணைக்காது – மாயாவதி விமர்சனம்

லக்னோ: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் இதயங்களை விட கைகளை இணைத்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே இருக்கும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்துக்கு உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி அழைக்கப்படவில்லை. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் … Read more

சியாட்டில் நகரில் இந்திய துணை தூதரகம்: பெங்களூரு, அகமதாபாத்தில்  அமெரிக்க துணை தூதரகம்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் விருந்தளித்து கவுரவித்தார். இதன் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. நம்நாட்டில் தலைநகர் டெல்லியில் தூதரகத்தையும், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத்தில் துணை தூரகங்களையும் அமெரிக்கா அமைத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான மக்கள் உறவு மேலும் வலுவடைவதை உறுதி செய்ய கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் அகமதாபாத் நகரங்களில் மேலும் இரு துணை தூரகங்களை திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக … Read more

2,000 டொமைன்களை வாங்கி ஆபாச காட்சிகள் மூலம் சீன மோசடியாளர்கள் வலை: இந்தியர்களின் தகவலை திரட்ட சதி

புதுடெல்லி: தகவல் திருட்டு, நிதி மோசடியில் ஈடுபடும் சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வரும் நிலையில், 4 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்களை சீன மோசடியாளர்கள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் இணைய வழி குற்றங்கள் அல்லது மோசடிஅதிகரித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, தகவல்திருட்டு, நிதி மோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சீனஇணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துவருகிறது. மேலும் இணையதள குற்றங்களைத் … Read more

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளருக்கு போலீஸ் காவல்

கோவை: முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பெண் ஆதரவாளரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி(56). இவர், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக திமுக பிரமுகர் ஹரீஷ், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், கடந்த 20-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர். உமா கார்க்கியை … Read more

கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புனே: கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பு தொடர்பான மாநாடுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன்படி மகாராஷ்டிராவின் புனே நகரில் ஜி-20 உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: மனித குல நாகரிகத்தின் … Read more

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு … Read more

முதல்வர் அறிவித்து 10 நாட்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராத குறுவை தொகுப்பு திட்டம்

தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்வர் அறிவித்து 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால், விரைந்து அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடி சுமார் 5 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடனும், அதிகளவிலும் … Read more

சர்வதேச அளவில் யோகா பயிற்சியை பிரபலப்படுத்தியது பிரதமர் மோடி அரசு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு

புதுடெல்லி: யோகா பயிற்சியை ஜவஹர்லால் நேரு பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறிய நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை அறிவித்தது. இதையடுத்து, 9-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more