தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு – மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

மும்பையில் கரோனா சிகிச்சை கள மருத்துவமனை ஒப்பந்தத்தில் ஊழல் – ஆதித்ய தாக்கரே நண்பர்கள் வீடுகளில் சோதனை

மும்பை: மும்பையில் கரோனா சிகிச்சைக்கான கள மருத்துவமனை ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களில் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது, அதற்கான சிகிச்சைகளை அளிக்க மும்பையின் பல இடங்களில் கள மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தங்கள் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதித்ய தாக்கரேவின் நண்பர் சூரஜ் சவான், சஞ்சய் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த … Read more

நோயாளி மரண வழக்குகளில் மருத்துவர் மீதான கைது நடவடிக்கைக்கு தடை: தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம்சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல் துறையினருக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிகிச்சையின்போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-ன் (Causing death by … Read more

அரிசியில் அரசியல் வேண்டாம்: அமித் ஷாவிடம் சித்தராமையா வேண்டுகோள்

புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா … Read more

"புகை மட்டுமே வந்தது": சென்ன – லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: சென்னை அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயில் இஞ்சினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.12164 பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே செல்லும்போது ரயிலின் இஞ்சினில் … Read more

மணிப்பூர் வன்முறை குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை: காங்கிரஸ் விமர்சனம் 

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையில் மத்திய அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. முன்னதாக மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி … Read more

தமிழகத்தின் கணபதி சாந்தி, சுகந்திக்கு தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்கள் இருவருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கான 2022 மற்றும் 2023-ம் ஆண்டின் தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்கினார். இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உன்னத மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் மத்திய … Read more

''சமூக நீதி மண்ணில் எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம்'' – பாட்னா சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின்

பாட்னா: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். வரும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார். இதையடுத்து, ஜூன் 12-ம் தேதி பாஜகவுக்கு எதிரான … Read more

முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவு – காவல்துறை மரியாதைக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: இராஜாஜி, காமராஜர் மற்றும் கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியவரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளருமான சபாநாயகம் ஐ.ஏ.எஸ் உடல்நலக்குறைவால் மரணடைந்தார். அவருக்கு வயது 101. அவரின் மறைவையடுத்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இந்திய ஆட்சிப் பணியில் … Read more