பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் தீவிரமும் உண்மையும் இல்லை: மாயாவதி விமர்சனம்
லக்னோ: பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை பாட்னாவில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தில் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து ஆலோசிக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. … Read more