விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தொடரக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய கதவணை கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம், கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே பாலத்துடன் கூடிய கதவணை கட்ட அரசு ரூ.400 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றின் கரையில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சுந்தரவிமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் … Read more