மணிப்பூர் வன்முறை | ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. முன்னதாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். … Read more