இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அதிக முதலீடு: பிரதமர் நரேந்திர மோடியிடம் எலான் மஸ்க் உறுதி

வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். நேற்றைய தினம் மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். எலான் மஸ்க் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்றும் ஆன்மீகம் முதல் எரிசக்தி வரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம் என்றும் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் கூறுகையில், “நான் மோடியின் ரசிகன். அவர் இந்தியா மீது உண்மையில் பெரும் அக்கறை கொண்டுள்ளார். … Read more

500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல் | எங்கு, எத்தனை கடைகள்… – தமிழக அரசு உத்தரவின் முழு விவரம்

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்டஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையே, ‘‘தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 … Read more

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதிலும் 70 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்த பாஜக திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் சிறுபான்மையினர் வாக்குகளை பாஜக குறி வைக்கிறது. முதன்முறையாக தேசிய அளவில் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. மாறிவரும் அரசியல் சூழலில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து வெற்றி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய, பிஹாரின் பாட்னாவில் 27 கட்சிகளின் தலைவர்கள் நாளை கூட உள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் … Read more

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. அரங்கில் யோகா – 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு

நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மோடி அங்கு, வரும் 25-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு … Read more

6 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் பயணம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர், லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளை கவனித்து வருகிறார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்ட … Read more

அசாம் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 31-ல் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டில் இதுவரை 523 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,842 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. குவாஹாட்டி, சில்சார் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என … Read more

“நடிகர்கள் பாப்புலாரிட்டி மூலம் முதல்வர் ஆகிவிட நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு” – திருமாவளவன்

சென்னை: “பொதுவாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மதிமுக முதன்மைச் செயலாளர் … Read more

மணிப்பூர் வன்முறை | மாநில அரசுக்கு எதிராக 9 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

இம்பால்: மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் 5 விஷயங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மாநில அரசு மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனை மீட்டெடுக்க சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி சில சிறப்பான … Read more

கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு – கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

சென்னை: கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-ன்படி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் மூலம் அங்கரிக்கப்பட்ட நிறுவனமான நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM), சென்னை என்ற மைய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு தமிழகத்துக்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் … Read more

அருணாச்சலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை இன்று (ஜூன் 21) பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, ஆத்திரமூட்டும் … Read more