மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிட உள்ளோம்: கே.பாலகிருஷ்ணன் 

சென்னை: “தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பிபிசி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு … Read more

“நாட்டு நலனுக்காக நானும் ராகுலும் இணைந்துள்ளோம்” – ஒற்றுமை யாத்திரையில் ஒமர் அப்துல்லா

பானிஹால்: “தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், நாட்டில் நிலவி வரும் சூழலை மாற்றும் அக்கறையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றேன்” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, அதன் இறுதி பகுதியான ஜம்மு காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. சிறிய இடைவேளைக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் பானிஹால் பகுதியில் இருந்து யாத்திரை வெள்ளிக்கிழமை … Read more

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்

நியூயார்க்: ’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரம் தான் இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து … Read more

மோடி – பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை: சென்னை பல்கலை.க்கு எஸ்எஃப்ஐ கண்டனம்

சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதித்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலச் தலைவர் கோ.அரவிந்தசாமி மற்றும் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ஊடகமான பிபிசி 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை அடிப்படையாக வைத்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருந்தது. தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடி … Read more

‘காப்பியடித்தல்’ பாதிப்பு முதல் கடின உழைப்பு வரை: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி இன்று (ஜன 27-ம் தேதி) நடைபெற்றது. டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை … Read more

தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து, நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கி, தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன.27) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.1.2023) தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு … Read more

கர்நாடக முதல்வரிடம் விசாரணை கோரி காங். புகார்

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பெலகாவி பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “இந்த‌ தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கலாம்” என கூறினார். இது தொடர்பான ஆடியோ ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் … Read more

கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனங்களை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநராட்சியில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் … Read more

மத்திய அரசின் தடையை மீறி பிபிசி ஆவண படத்தை வெளியிட்ட காங்கிரஸ்

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறது. “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த … Read more

எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு

புதுடெல்லி: கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அப்போது இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி … Read more