சென்னையில் 2 ஆண்டுகளில் சாலை விபத்து இறப்புகள் 19.70% குறைவு: காவல் துறை தகவல்

சென்னை: சென்னையில் உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. 2021 உடன் ஒப்பிடும்போது,உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022-ல் 10.78% குறைந்துள்ளது. மேலும், 2022 உடன் ஒப்பிடும்போது 2023-ல் உயிரிழப்பு விகிதம் 10% குறைந்துள்ளது. எனவே, 2021 உடன் ஒப்பிடும்போது, 2023-ல் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று வரை 19.70% குறைந்துள்ளது என்று போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாலை விபத்துகளால் … Read more

கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து, வெளிச் சந்தையில் அரசி வழங்குவதை நிறுத்துவதாக … Read more

முரண்களை யோகா மூலம் முறியடிக்க வேண்டும்: சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி அறிவுரை

நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாம் யோகா மூலம் முரண்களை முறியடிக்க வேண்டும், எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும், தடுப்புகளை தகர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 21-ம் தேதி) நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியர்கள் எப்போதுமே புதிய சிந்தனைகளை வரவேற்றுப் பாதுகாத்துள்ளனர். தேசத்தின் … Read more

கரும்பு விவசாயிகளை பிழிந்தெடுக்கும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை

உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவும் நிர்வாக குளறுபடிகளால் ஆலையை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பொங்கலூர், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் கரும்புகள் அரவைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் தொடங்க வேண்டிய அரவை, பராமரிப்பு பணி காரணமாக மே … Read more

உ.பி.,யில் சமாஜ்வாதி – ஆர்எல்டி கூட்டணியில் பிளவு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் சேர அகிலேஷை வலியுறுத்தும் ஜெயந்த்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி (எஸ்பி)-ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கூட்டணியில் பிளவு உருவாகிறது; மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, எஸ்பியின் அகிலேஷ்சிங் யாதவையும் சேர வலியுறுத்துகிறார். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாகக் கருதப்படுவது ஆர்எல்டி. இக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஆவார். இப்பகுதியில் அதிகமுள்ள ஜாட் சமூகம் மற்றும் விவசாயிகளின் ஆதரவு கட்சியாக ஆர்எல்டி விளங்குகிறது. கடந்த 2017 உ.பி … Read more

டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: அட்லாண்டிக் கடலில் 48 மணி நேரமாக நடக்கும் தீவிரத் தேடுதல் பணி

அட்லாண்டிக்: அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்ழுழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி 48 மணி நேரமாக நடந்து வருகிறது. 21 அடி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 5 சுற்றுலாப் பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் பயணப்பட்டது. ஆனால் புறப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அந்த நீர் மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. இந்நிலையில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி 48 மணி நேரமாக தொடர்ந்து வருகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் கனடா … Read more

Silence Unknown Callers | வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!

கலிபோர்னியா: வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின் தொல்லை அழைப்புகளின் இம்சையில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், … Read more

தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியவில்லை – நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையீடு

சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையிலேயே வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 8 நாட்களுக்கு விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 16-ம்தேதி அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, தனியார் மருத்துவமனையின் மருத்துவர் குழுவை அமலாக்கத் துறையினர் அணுகியுள்ளனர். அப்போது, ‘‘இதய பைபாஸ் … Read more

‘எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்’: கேஜ்ரிவால் வேண்டுகோள் 

புதுடெல்லி: ஜூன் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து தலைவர்கள் விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகத்தை வகுப்பதற்காக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் … Read more

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த வியூகம்: முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்தாக அமையும். அத்தகைய பாஜகவை வீழ்த்த, பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, அவரது நினைவாக திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுரஅடி பரப்பில் ரூ.12 கோடியில் கலைஞர் … Read more