சபரிமலையில் விமான நிலையம் – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்காக மாநில அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமையவுள்ளது. ரூ.3,411 கோடி செலவில் விமான நிலையம் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக … Read more

4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று (ஜூன் 21) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையை வழிநடத்திச் சென்ற ‘சனாதனி புல்டோசர்’

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஜெகநாதர் கோயிலில் நேற்று ரத யாத்திரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பகவான் ஜெகநாதர், அவரது சகோதரர் பாலபத்ரா, சகோதரி சுபத்ரா ஆகியோரது சிலைகள் ரதங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ராஜ்கோட்டிலிருந்து நேற்று காலை புறப்பட்ட ரத யாத்திரை 26 கி.மீ தூரம் பயணம் செய்து மாலையில் மீண்டும் ஜெகநாதர் கோயிலை வந்தடைந்தது. வழியில் சுவாமி நாராயணன் கோயிலில் ரதம் நின்று சென்றது. இந்த ரத யாத்திரையை ஒரு … Read more

'மோடியின் தீவிர ரசிகன் நான்' – அமெரிக்காவில் இந்தியப் பிரதமரை சந்தித்த எலான் மஸ்க் புகழாரம்

நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான எலான் மஸ்க், பிரதமர் மோடியை நியூயார்க் நகரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக மஸ்க் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அதன் ஒரு பகுதியாக மஸ்க் – பிரதமர் மோடி சந்திப்பு நடந்துள்ளது. அப்போது அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு … Read more

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 16 உறுப்பினர் நியமனம் – ஆளுநர் உத்தரவை அடுத்து அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் சமது ஆகியோர் அடங்கிய 16 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அறிக்கை: தமிழக ஹஜ் கமிட்டிக்கு பின்வரும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெஎம்எச் அசன் மவுலானா, பி.அப்துல் சமது, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் சென்னையை சேர்ந்த பாத்திமா அகமது, எம்.தாவூத் பீ, ராமநாதபுரத்தை சேர்ந்த … Read more

ஆந்திராவில் சர்வதேச கல்வி திட்டம் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஜகனண்ணா ஆனிமுத்தியாலு’ எனும் அரசு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய விருந்தினராக பங்கேற்றார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் இண்டர்மீடியட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஆந்திர மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண வேண்டும். இதற்காக பள்ளி … Read more

ODI WC Qualifier | போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து இதயங்களை வென்ற ஜிம்பாப்வே ரசிகர்கள்

ஹராரே: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளது. அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வே நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இறுதிப் போட்டிக்கு … Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? – சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் பெயர்கள் பரிசீலனை

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து புதிதாக சட்டம் – ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை(22-ம் தேதி) … Read more

போதை மருந்து கடத்தலுக்கு எதிராக டெல்லியில் போலீஸார் சோதனை

புதுடெல்லி: “ஆபரேஷன் கவாச்’’ நடவடிக்கையின் கீழ் டெல்லியில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். போதைப் பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த”ஆபரேஷன் கவாச்” நடவடிக்கை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு … Read more

சென்னை தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இன்று ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை – சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான மூன்று ரத்தக்குழாய்களில் தீவிர அடைப்பு உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தி சில தினங்களுக்கு பின்பே இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையென்றால், ரத்தக் கசிவு ஏற்படும். அதனால், 5 நாட்கள் அறுவை சிகிச்சை … Read more