ஒரே நாளில் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல்: 726 தங்கும் விடுதிகளில் சோதனை

சென்னை: சிறப்பு வாகன தணிக்கை மூலம் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 726 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் … Read more

அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்

புதுச்சேரி: தெலங்கானா அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஆளுநரை எதிர்க்கிறது. இது எனக்கு புளித்துவிட்டது. மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றினார். … Read more

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் … Read more

குடியரசு தின கொண்டாட்டம்: எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. உலகின் பழமையான ரயில் இன்ஜின் ‘இஐஆர்-21’. இங்கிலாந்தில் 1855-ல் தயாரிக்கப்பட்ட இது 167 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1909-ம் ஆண்டு வரை இந்தியாவில் இது பயன்பாட்டில் இருந்தது. பின்னர், ஜமால்பூர், ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிக பழமையான ரயில் இன்ஜினான … Read more

குடியரசு தின விழா அணிவகுப்பு: காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில், காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின அணிவகுப்பில் அரசின் … Read more

Mr.Tweet | ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். புதுப் பெயர் வந்தது எப்படி? … Read more

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வகுடிகள் கொண்ட … Read more

பிபிசி ஆவணப்படத்தை எதிர்த்ததால் காங்கிரஸார் கடும் விமர்சனம் – ஏ.கே.அந்தோணி மகன் அனில் விலகல்

திருவனந்தபுரம்: பிபிசி நிறுவனம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே. அந்தோணி மகன்அனில் அந்தோணி, நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். குறிப்பாக, காங்கிரஸ், பாஜக இடையே, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் மோடி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் உள்நாட்டு … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: குடியரசு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதே வேளையில், … Read more

பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு கடையை மூடி விட்டு வீடு திரும்புகையில், பஸ் நிலையம் பின்புறம் பாம்பாட்டி ஒருவரை பார்த்த மணிகண்டா, அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தின் மீது போடும்படி கெஞ்சினார். ஆனால், பாம்பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் மணிகண்டா தொடர்ந்து பணம் தருவதாக கூறி அவரை வற்புறுத்தினார். ‘ஒரே ஒரு … Read more