எல்லை கிராமங்களின் 2,000 ஆண்டு வரலாறு சேகரிப்பு – அமைச்சர் அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: மத்திய ஆயுத காவல் படையினர், அவர்கள் பணியில் இருக்கும் கிராமத்தின் 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்று விவரங்களைச் சேகரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த 12-ம் தேதி, மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) பொறுப்புவகிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா கலந்தாலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் எல்லை கிராமங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லை கிராமங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய … Read more

திருப்பூர் | ’மான்ஸ்டர்’ பட பாணியில் பழக்கடையில் பணம் திருடிய எலி – கடைக்காரர்கள் அதிர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடையில் பணம் திருடிய எலியைக் கண்டு, கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் எலி பணத்தை பதுக்கிய பொந்தில் இருந்து ரூ.1500 மீட்கப்பட்டது. திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இக்கடையில் இவரிடம் 5 பணியாட்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி கேமராவை பொருத்தி … Read more

எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி

புதுடெல்லி: மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் சூழல் நிலவுகிறது. இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் ஜுன் 23-ல் பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர். இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது பற்றி ஆராய எதிர்க்கட்சிகள் … Read more

சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வெள்ளியங்கிரி மலையில் 2006ம் ஆண்டு முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் பல கட்டிடங்களை கட்டியதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக, நவம்பர் 19, 2021 அன்று ஈஷா அறக்கட்டளைக்கு … Read more

அசாமில் கனமழை – வெள்ளத்தில் சிக்கிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 31,000 பேர்

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள மழைவெள்ளத்தால் 10 மாவட்டங்களில் சுமார் 31,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: “சிராங், தர்ராங், திமாஜ், துப்ரி, திப்ருகார், கோக்ரஜ்கர், லக்கிம்பூர், நல்பரி, சோனிட்புர் மற்றும் உடல்குரி உள்ளிட்ட மாவட்டங்களில் 30,700 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்ருகர் மாவட்டத்தில் 3,800-க்கும் அதிகமானோரும், கோக்ரஜ்கர் மாவட்டத்தில் 1,800-க்கும் அதிகமானோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு … Read more

“மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் கேடு” – முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: “மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும்” என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் பேசியது: “கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பிஹார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. ஆனால், … Read more

ரூ.17,500-க்கு முகத்தில் மசாஜ் செய்துகொண்ட மும்பை பெண்ணுக்கு சருமப் பிரச்சினை – போலீஸில் புகார்

மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் 17,500 ரூபாய் செலவு செய்து தனது முகத்துக்கு ஃபேஷியல் மசாஜ் செய்து கொண்டுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரது தோலில் காயம் (Skin burn) ஏற்பட்டுள்ளது. அதோடு, அது நிரந்தரமாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். போலீஸாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள காமதேனு … Read more

“என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டை இது” – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

திருவாரூர்: “எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு அது திறக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்” என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவாரூரில் கலைஞர் கோட்டம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நெஞ்சில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக் கூடிய நிலையில் உங்கள் முன்பு நான் நின்றுகொண்டிருக்கிறேன். … Read more

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணைராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்துவது என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. மேலும் “தேர்தல் நடத்துவது வன்முறைக்கான உரிமையாக இருக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணை ராணுவப்படையினை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசும், தேர்தல் ஆணையமும் … Read more

உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல் 

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி, செந்திலாபாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் … Read more