கர்நாடகாவில் பதான் படத்துக்கு எதிர்ப்பு – போராட்டம் நடத்திய 35 பேர் கைது
பெங்களூரு: பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து நடனம் ஆடியதால் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் மங்களூரு, பெலகாவி, கல்புர்கி ஆகிய இடங்களில் பதான் படத்தை திரையிட்ட திரையரங்குகளை இந்துத்துவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மங்களூருவில் பஜ்ரங்தள அமைப்பினர் பாரத் திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், பேனர் ஆகியவற்றை … Read more