அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

அட்லாண்டிக்: நூறு வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகத்தை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி இருக்கிறது. 21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் (பயணத்தில் பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ஒருவரும் இருந்துள்ளார்) ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை திங்கட்கிழமைவரை … Read more

தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு – போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் இன்று காலை சரிந்து விழுந்தது. தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பகுதி தஞ்சாவூர் – திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான … Read more

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கா புறப்படும் முன்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமெரிக்காவுக்குப் புறப்படுகிறேன். நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். இதில், ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் … Read more

மழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: மழை காரணமாக திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே போல சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று இந்த மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

கேதார்நாத்தில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை தூவிய பெண்: கோயில் நிர்வாகம் போலீஸில் புகார்

கேதார்நாத்: கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் புகைப்படம், வீடியோ … Read more

குவாரிக்குள் அத்துமீறி புகுந்த புகாரில் சீமான் உட்பட 75 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அப்போது, சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் பாதிப்புகள் ஏற்படுவதாக சீமானிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். வடக்கு புதூரில் ஆனைகுளம் சாலையில் உள்ள கல்குவாரிக்கு சீமான் … Read more

ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்து அவதூறு பேசினால் நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள் குறித்து ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை குறித்து பல அரசியல் கட்சியினர் தவறாக பேசி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம், 2,445 கோயில்கள் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்து, அதில் பல கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன. மீனவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அதிகம் … Read more

பதிவின்றி முகாமில் தங்கியுள்ள 258 இலங்கை தமிழர் நிலை என்ன? – மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு

ராமேசுவரம்: உலக அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில் சொந்த மண்ணைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளோரின் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 8 கோடிபேர் அகதிகளாக இருப்பதாகவும், போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை 28,300 என்கிறது ஐநா சபை. “எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது. எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை” என்பது ஐ.நா.வின் அகதிகள் தின முழக்கமாகும். இந்தியாவில் வங்கதேசம், திபெத், … Read more

4,000 தற்காலிக வீடுகள் உடனடியாக கட்டித் தரப்படும் – மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலின் சிங்மாங் கிராம பகுதியில் அடையாளம் தெரியாத வன்முறையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில்(எஸ்டி) இடம்பெறுவது தொடர்பாக அந்த சமூகத்தினருக்கும் அவர்களுக்கு எதிரான குகி மற்றும் நாகா சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் … Read more

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் சுட்டுக் கொலை

அமிர்தசரஸ்: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி சீக்கியர்கள் சிலர் போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு … Read more